பாடல் #37830
என் ஆத்தும நேசராம்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
என் ஆத்தும நேசராம் இயேசு என்னை காத்து நடத்திடும் இயேசு தம் நேத்திரம் போல் எம்மை காத்து என்னை ஆசீர்வதித்திடும் இயேசு ஈந்திடுவேன் என் உள்ளத்தையே தந்திடுவேன் காணிக்கையாய் அல்லேலூயா ஆமென் நான் பாவியாய் இருக்கையில் இயேசு என்னை தாவி அணைத்தவர் இயேசு என் ஜீவனை காத்தவர் இயேசு எனக்காவியை ஈந்தவர் இயேசு என் ஞானமும் தானமும் இயேசு எனக்குள்ள தெல்லாம் இயேசு என் பெலனும் கீதமும் இயேசு என் இரட்சிப்புமாம் இயேசு என் ஆறாத்துயரத்தில் இயேசு எனக்காறுதல் அளிப்பவர் இயேசு என் தேவனாய் வந்தவர் இயேசு தம் ஜீவனைக் கொடுத்தவர் இயேசு