பாடல் #37829
நிதமும் கூடி தோத்திரம்
🔤 Nidhamum Kooti Thotthiram
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிதமும் கூடி தோத்திரம் பாடி இதயம் பொங்கி இயேசுவை - நாமே இன்றும் என்றும் நன்றியோடு ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் மா பாவியான என்னை மீட்டதால் மகிபனை நாம் பாடித் துதிப்போம் பாவ உளையின் சேற்றிலிருந்தேன் பார்த்திபன் என்னை தூக்கி எடுத்து கல்வாரியின் இரத்தத்தினால் கழுவினார் என்னை என் இயேசு கழுவினார் என்னை தாய் தகப்பன் தமையர்கள் வணங்கும் பேய் வணக்கத்தில் போய்க் கொண்டிருந்தேன் கர்த்தன் என்னை முன் குறித்தறிந்து சேர்த்துக் கொண்டாரே தம்மிடமாய் சேர்த்துக் கொண்டாரே பெருமையால் என் உள்ளத்தை நிறைத்து வெறுமையாய் இப்பாரினில் அலைந்தேன் அருமையாய் என் உள்ளத்தில் வந்து கிருபையால் நிறைத்தாரே என்னையே கிருபையால் நிறைத்தார் ஆவி ஈந்து என் காயத்தை மாற்றி ஆத்துமாவை தம் ஆலயமாக்கி கர்த்தர் என்னை காத்ததாலே என்ன ஆனந்தம் என்றென்றும் என்ன ஆனந்தம் மேசியா வான் மேகத்தில் வந்து ஆசையாய் நம்மை அவரிடம் சேர்க்க தேவசாயல் நம் தேகத்தில் கொண்டு காத்திருப்போம் நாம் எப்போதும் காத்திருப்போம் நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nidhamum Kooti Thotthiram Paati Idhayam Pongki Yesuvai - Naamae Inrum Enrum Nanriyotu Sthottharippom Naam Eppothum Sthottharippom Naam Maa Paaviyaana Ennai Meettathaal Makibanai Naam Paatith Thuthippom Paava Ulaiyin Saerrilirunthaen Paartthiban Ennai Thookki Etutthu Kalvaariyin Ratthatthinaal Kazhuvinaar Ennai En Yesu Kazhuvinaar Ennai Thaay Thakappan Thamaiyarkal Vanangkum Paey Vanakkatthil Poyk Kontirunthaen Kartthan Ennai Mun Kurittharinthu Saertthuk Kontaarae Thammidamaay Saertthuk Kontaarae Perumaiyaal En Ullatthai Niraitthu Verumaiyaay Ippaarinil Alainthaen Arumaiyaay En Ullatthil Vanthu Kirupaiyaal Niraitthaarae Ennaiyae Kirupaiyaal Niraitthaar Aavi Eenthu En Kaayatthai Maarri Aatthumaavai Tham Aalayamaakki Kartthar Ennai Kaatthathaalae Enna Aanandham Enrenrum Enna Aanandham Maesiyaa Vaan Maegatthil Vanthu Aasaiyaay Nammai Avaridam Saerkka Thaevasaayal Nam Thaegatthil Kontu Kaatthiruppom Naam Eppothum Kaatthiruppom Naam