பாடல் #37817
பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
🔤 Paramandalanggalil Veerrirukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரமண்டலங்களில் வீற்றிருக்கும் பரமபிதாவே, எந்நாளும் பரிசுத்தப்படூக உம் நாமம். பரிவுடன் வருக உம் ராச்சியம் பரலோகத்தில் உமது சித்தம் பண்புடன் செய்யப்படுவது போல் தரணியிலுமது சித்தமுமே தவறாது செய்யப்படுக சதா. அன்றன்றுள்ள எம் ஆகாரம் அன்புடன் எங்களுக்கீந்தருளும் நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும் நன்னயம் போலெம் பிழை மன்னியும் தேவ சோதனைக் கெமை விலக்கி தீமையினின்றெமை இரட்சியுமே, மேவும் ராச்சியம், வல்லலை, மகிமை மிகவும் உமதென்றுமே ஆமேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paramandalanggalil Veerrirukkum Paramapithaavae, Ennaalum Parisutthappatooga Um Naamam. Parivudan Varuga Um Raachsiyam Paralogatthil Umathu Sittham Panpudan Seyyappatuvathu Pol Tharaniyilumathu Sitthamumae Thavaraathu Seyyappatuga Sathaa. Andranrulla Em Aakaaram Anpudan Enggalukkeendharulum Nandrayalaar Katan Yaam Mannikkum Nannayam Polem Pizhai Manniyum Thaeva Sodhanaik Kemai Vilakki Theemaiyininremai Iratsiyumae, Maevum Raachsiyam, Vallalai, Makimai Migavum Umathenrumae Aamaen.