பாடல் #37814
அன்பிலே பூரணரே
🔤 Anpilae Pooranarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பிலே பூரணரே - எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா அழகில் சிறந்தோனே - எங்கள் ஆசையின் கோமானே அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்னியராம் -அழைத்தணைத்தீரே 1. காத்தீரே கருணையுடன் - எம் கலக்கங்கள் நீக்கி கனிவுடன் தூக்கி கதியில்லா ஏழைகளின் பெரும் கவலைகளைப் போக்கி அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் ஆறுதல் அளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே 2. ஆனந்தம் ஆனந்தமே - உம் ஆருயிர் ஈந்தீர் அவனியில் வந்தீர் அலகைதனை வென்றீர் - அவன் அடிமைகளை மீட்டீர் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே 3. கோடையில் குளிர் தருவே - கடும் வாடையின்- மறைவே ஏழையின் உறவே கூடுவோம் திருப்பாதம் - தினம் பாடுவோம் அவர் கீதம் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்பே, அன்பே, அன்னையின் மேலாய் - அன்பிலே 4. நித்திய பரிசுத்தரே - உம் வருகையில் அடியாரைப் பரிசுத்தம் செய்யும் உத்தம் ஜீவிகளாய் - நல் நித்திய வாழ்வினிலே அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே 5. தோத்திரம் துதியுமக்கே - தேவா அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம் ஆயத்தமுள்ளோர்க்கே - நீர் அருணோதயமாவீர் அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் ஆ! ஆனந்தம் அல்லேலூயா பாடி - அன்பிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpilae Pooranarae - Enggal Aanandha Roopaa Athisaya Raajaa Azhakil Siranthonae - Enggal Aasaiyin Komaanae Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Anniyaraam -azhaitthanaittheerae 1. Kaattheerae Karunaiyudan - Em Kalakkanggal Neekki Kanivudan Thookki Kathiyillaa Aezhaigalin Perum Kavalaigalaip Pokki Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Aarudhal Alittheer Anuthinam Thuthippaen - Anpilae 2. Aanandham Aanandhamae - Um Aaruyir Eentheer Avaniyil Vantheer Alakaidhanai Venreer - Avan Atimaigalai Meetteer Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Allaelooyaa Paati Agamakizhnthituvom - Anpilae 3. Kotaiyil Kulir Tharuvae - Katum Vaataiyin- Maraivae Aezhaiyin Uravae Kootuvom Thiruppaadham - Thinam Paatuvom Avar Keedham Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Anpae, Anpae, Annaiyin Maelaay - Anpilae 4. Nitthiya Parisuttharae - Um Varukaiyil Atiyaaraip Parisuttham Seyyum Uttham Jeevigalaay - Nal Nitthiya Vaazhvinilae Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Allaelooyaa Keedham Paati Makizhvom - Anpilae 5. Thotthiram Thuthiyumakkae - Thaevaa Anpin Aazham Arinthu Pugazhvom Aayatthamullorkkae - Neer Arunodhayamaaveer Ahaa Ahaa Aanandham Ahaa Ahaa Aanandham Aa! Aanandham Allaelooyaa Paati - Anpilae