பாடல் #37808
வருவீர் மனம் மகிழ
🎙 கிறிஸ்தவ பாடல்
வருவீர் மனம் மகிழ - அரசே வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர் - 2 வருவீர் அருள்மாரி அளித்திடவே - ஆ! ஆ! ஆ அருள் காரிருள் அகற்றிடவே பாரில் பாவிகள் பரனடிபணிய இயேசுவின் நாமமதை ஆ! ஆ! ஆ! - இயேசு நேசர்கள் உயர்த்திடவே பேசுமடியார் பெலனடைந்திடவே உன்னத பெலனீய - ஆ ஆ! ஆ! - உன்னத வன்மையுடன் நடக்க கன்மலையும்மைப் பின்தொடர ஆதி சபையது போல் ஆ! ஆ! ஆ! - ஆதி ஆவியின் வரங்களினால் அலங்கரித் தெம்மை ஆட்கொண்டருள தூயனுமைத் துதிக்க - ஆ! ஆ! ஆ! - தூயனுமை தூய்மை அகம்தரிக்க காயம் முழுவதும் உமக்கே படைக்க ஆயத்தமாகிடவே ஆ! ஆ! ஆ! - ஆயத்த நாயகன் வருகையிலே மாயமான யாவையுமகற்ற