பாடல் #37806
தேவரீர்க்கே தினமும்
🔤 Thaevareerkkae Thinamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர்க்கே தினமும் சரணம் திவ்விய நாமத்திற்கே நிதம் சரணம் அனுதினம் அடியார் அன்பினால் வாழ ஆவியின் அபிஷேகம் அளித்திடும் நாதா தேவையான அருள் அளித்திடவே தேவாசீர்வாதங்கள் தந்திடவே உன்னத பெலத்தால் என்னை நிறைக்க உன்னத ராஜனே உம்மையே பணிந்தோம் தாழ்மையைத் தாரும் தயவுள்ள குருவே தாழ்மையின் கோலமாய் வந்தவரே நேர்மையாய் நாங்கள் நிர்மல நாதனே உம்தனைப் பணிந்து உயர்வடைந்திடவே ஆவியின் நிறைவை அளித்திடும் இப்போ ஆவியால் நிறைந்தும்மைத் துதித்திடவே பாவியாம் என்னைப் பரிசுத்தம் செய்ய பாரினில் வந்த பரலோக நாதா பரிசுத்த ஆவியின் புதுபெலன் அளியும் பரிசுத்த ஜீவியம் செய்திடவே வல்லமை அளிக்கும் வல்லமை தேவனே உன்னதர் உம்மைப் பணிந்திடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareerkkae Thinamum Saranam Thivviya Naamatthirkae Nidham Saranam Anuthinam Atiyaar Anpinaal Vaazha Aaviyin Apishaegam Alitthitum Naathaa Thaevaiyaana Arul Alitthidavae Thaevaaseervaadhanggal Thanthidavae Unnatha Pelatthaal Ennai Niraikka Unnatha Raajanae Ummaiyae Paninthom Thaazhmaiyaith Thaarum Thayavulla Kuruvae Thaazhmaiyin Kolamaay Vandhavarae Naermaiyaay Naanggal Nirmala Naadhanae Umthanaip Paninthu Uyarvatainthidavae Aaviyin Niraivai Alitthitum Ippo Aaviyaal Nirainthummaith Thuthitthidavae Paaviyaam Ennaip Parisuttham Seyya Paarinil Vandha Paraloga Naathaa Parisuttha Aaviyin Puthupelan Aliyum Parisuttha Jeeviyam Seythidavae Vallamai Alikkum Vallamai Devanae Unnathar Ummaip Paninthituvaenae