பாடல் #37802
என் தேவனே என் இயேசுவே
🔤 En Devanae En Yesuvae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே மா துரோகியாம் என்னை இரட்சித்தீரே பாவ சாப தோஷங்கள் நீக்கிப் பரிவுடன் இரட்சித்தீரே ஆறுதலோடு அவனியில் வாழ அடிமை எனக் கிரங்கினீரே என்னைத் தேற்றித் தாங்கி நடத்தும் எந்தன் இயேசு தேவனே என்னை ஏந்திச் சுமந்து தப்புவித்து என்னைக் காத்திடும் என் இன்ப தேவனே உலகத் தோற்றத்திற்கு முன் என்னை முன் குறித்தீரே அடியான் உமக்கு ஊழியம் செய்ய உலகினில் என்னை உருவாக்கி வைத்தீரே உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ என்றார் அடியானை என்னிடம் : உன்னை அனுப்புகிறவர் நானல்லவா என்றீரே உன்னைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்வேன் என்றீரே என்னைக் கொண்டு பெரிய காரியங்களை சத்திய சபையில் அதிகமாய்ச் செய்வீரே நீ சிறியவனென்றா எண்ணுகிறாய் என என்னிடம் கேட்டீரே நீ சிறியவனல்ல பெரியவன் உலகத்திற்குப் பெரியவன் என்றீரே விசேஷித்த ஞானம் புத்தியும் அறிவும் தருவேன் என்றீரே அவனியில் ஆத்துமாக்கள் மீட்புக்காய் அடியானையும் அன்பால் வைத்தீரே அதிசயங்கள் அற்புதங்கள் அதிகமாய்ப் பெருகச் செய்வீர் அதிசயமாம் உம் திரு நாமம் அனைவரும் அறியக் கிரியை செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Maa Thurokiyaam Ennai Iratsittheerae Paava Saaba Thoshanggal Neekkip Parivudan Iratsittheerae Aarudhalotu Avaniyil Vaazha Atimai Enak Kirangkineerae Ennaith Thaerrith Thaangki Natatthum Endhan Yesu Devanae Ennai Aenthich Sumanthu Thappuvitthu Ennaik Kaatthitum En Inba Devanae Ulakath Thortratthirku Mun Ennai Mun Kurittheerae Atiyaan Umakku Oozhiyam Seyya Ulakinil Ennai Uruvaakki Vaittheerae Unakku Irukkira Indha Palatthotae Po Enraar Atiyaanai Ennidam : Unnai Anuppukiravar Naanallavaa Enreerae Unnaik Kontu Periya Kaariyanggalaich Seyvaen Enreerae Ennaik Kontu Periya Kaariyanggalai Satthiya Sapaiyil Athigamaaych Seyveerae Nee Siriyavanenraa Ennukiraay Ena Ennidam Kaetteerae Nee Siriyavanalla Periyavan Ulakatthirkup Periyavan Enreerae Visaeshittha Njaanam Putthiyum Arivum Tharuvaen Enreerae Avaniyil Aatthumaakkal Meetpukkaay Atiyaanaiyum Anpaal Vaittheerae Athisayanggal Arpudhanggal Athigamaayp Perugach Seyveer Athisayamaam Um Thiru Naamam Anaivarum Ariyak Kiriyai Seythituveer