பாடல் #37800
உம்மை மறந்துதிரிந்தமா
🔤 Ummai Maranthuthirindhamaa
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை மறந்துதிரிந்தமா பாவியாம் என்னை மன்னித்தருளினீர் தேவனே மன்னிக்கத் தயை பெருத்த மகிமையின் தேவனே மன்னித்தீர் இப்பாவியையும் மாபெரும் அன்பினாலே பாவங்களை மன்னித்தருள இயேசுவே உமக்கு மட்டுமே அதிகாரம் உண்டு பாவ மன்னிப்பு கொடுக்க உம் திரு இரத்தத்தை சிந்தினீர் சிலுவைதனில் சீர்கெட்ட பாவிகட்காய் பாவங்களை மறைக்காமல் என் அக்கிரமத்தைக் கர்த்தரிடம் அறிக்கையிட்டேன் என் மீறுதல்களையும் தேவனிடம் அறிவித்தேன் தேவன் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தார் அக்கிரமங்கள் யாவும் மன்னித்து நோய்களெல்லாம் குணமாக்குகிறவர் இயேசுவே மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்று சொல்லி குணமாக்கினீரே திமிர்வாதக்காரனையும் - உம்மை நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு கண்ணீர் விட்டுக் கதறினால் நம்முடைய பாவங்களை நம் இயேசு மன்னித்து அநியாயம் யாவும் நீக்கி சுத்திகரித்திடுவார் மீறுதல்கள் மன்னிக்கப்பட்டு பாவங்கள் யாவும் மூடப்பட்டவன் பாக்கியவான் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் அடைந்து பயந்து கர்த்தர் வழியில் நடப்பவனே பாக்கியவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Maranthuthirindhamaa Paaviyaam Ennai Mannittharulineer Devanae Mannikkath Thayai Peruttha Makimaiyin Devanae Mannittheer Ippaaviyaiyum Maaperum Anpinaalae Paavanggalai Mannittharula Yesuvae Umakku Mattumae Athikaaram Untu Paava Mannippu Kotukka Um Thiru Ratthatthai Sinthineer Siluvaidhanil Seerketta Paavigatkaay Paavanggalai Maraikkaamal En Akkiramatthaik Karttharidam Arikkaiyittaen En Meerudhalkalaiyum Devanidam Arivitthaen Devan En Paavatthin Thoshatthai Mannitthaar Akkiramanggal Yaavum Mannitthu Noykalellaam Kunamaakkukiravar Yesuvae Makanae Un Paavanggal Mannikkappattathenru Solli Kunamaakkineerae Thimirvaadhakkaaranaiyum - Ummai Nammutaiya Paavanggalai Naam Arikkaiyittu Kanneer Vittuk Katharinaal Nammutaiya Paavanggalai Nam Yesu Mannitthu Aniyaayam Yaavum Neekki Sutthigaritthituvaar Meerudhalkal Mannikkappattu Paavanggal Yaavum Moodappattavan Paakkiyavaan Paava Mannippaiyum Iratsippaiyum Atainthu Payanthu Kartthar Vazhiyil Natappavanae Paakkiyavaan