பாடல் #37799
நொறுங்குண்டு நருங்குண்ட
🔤 Norungkuntu Narungkunda
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நொறுங்குண்டு நருங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்டு நொறுங்குண்ட ஆவியோடும் அழுகையோடும் கண்ணீரோடும் கர்த்தரிடம் பாவ அறிக்கை செய்வோர் - இரட்சிப்படைவர் ஆழமான பாவக்குழியினின்றும் உளையான பாவச் சேற்றினின்றும் நிற்க நிலையில்லா பாவ வெள்ளத்தினின்றும் தூக்கி இரட்சிப்பவர் - நம் கர்த்தர் இயேசு மனுஷனின் சரீரத்தைப் பாவத்தினின்றும் மனுஷனின் ஆவியைச் சுயத்தினின்றும் மனுஷனின் ஆத்துமாவை நரகினின்றும் மீட்டு இரட்சிப்பவர் - கிறிஸ்து இயேசு பாவ சாபம் போக்கி நம்மை இரட்சிப்பவர் இடுக்கண்கள் யாவும் நீக்கி இரட்சிப்பவர் நோய்கள் வியாதிகள் நீக்கி இரட்சிப்பவர் நல்ல இயேசுநாதர் - நம் இயேசு நாதர் நம் இரட்சிப்பின் தேவன் இயேசு தாமே சதா காலங்களுக்கும் நம் தேவன் முற்று முடிய நம்மை இரட்சித்து முடிவு வரைக் காக்க வல்லவரே பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தாலும் இரட்சிப்பின் சந்தோஷத்தாலும் நிறைந்து மகிழ்ச்சிமேல் மகிழ்ச்சியால் நிறைந்துமே மகிமைமேல் மகிமையாய் - வாழ்ந்திடுவோம் ஆத்துமா இரட்சிப்பில் களிகூர்ந்து மகிழ்ந்து அன்பு அன்புடன் தியானித்து ஜெபித்து கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி களிப்புடன் வாழ்ந்து - மகிழ்ந்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Norungkuntu Narungkunda Irudhayatthotum Narungkuntu Norungkunda Aaviyotum Azhukaiyotum Kanneerotum Karttharidam Paava Arikkai Seyvor - Iratsippataivar Aazhamaana Paavakkuzhiyininrum Ulaiyaana Paavach Saerrininrum Nirka Nilaiyillaa Paava Vellatthininrum Thookki Iratsippavar - Nam Kartthar Yesu Manushanin Sareeratthaip Paavatthininrum Manushanin Aaviyaich Suyatthininrum Manushanin Aatthumaavai Narakininrum Meettu Iratsippavar - Kiristhu Yesu Paava Saabam Pokki Nammai Iratsippavar Itukkankal Yaavum Neekki Iratsippavar Noykal Viyaathigal Neekki Iratsippavar Nalla Yesunaadhar - Nam Yesu Naadhar Nam Iratsippin Devan Yesu Thaamae Sathaa Kaalanggalukkum Nam Devan Murru Mutiya Nammai Iratsitthu Mutivu Varaik Kaakka Vallavarae Parisuttha Aaviyin Santhoshatthaalum Iratsippin Santhoshatthaalum Nirainthu Makizhchsimael Makizhchsiyaal Nirainthumae Makimaimael Makimaiyaay - Vaazhnthituvom Aatthumaa Iratsippil Kalikoornthu Makizhnthu Anpu Anpudan Thiyaanitthu Jepitthu Karttharaip Paatik Keertthanam Panni Kalippudan Vaazhnthu - Makizhnthiruppom