பாடல் #37788
கர்த்தரின் பலத்த செயல்களை
🔤 Karttharin Palattha Seyalkalai
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பலத்த செயல்களை யாவரும் எண்ணி மகிழ்ந்திடுவோம் பரலோகின் தேவனின் மகிமையான செயல்களைத் தினமும் எண்ணி வானம் சிங்காசனமாயும் பூமி பாதப்படியுமாய் கொண்ட மகாபெரிய தேவனாம் கிறிஸ்து இயேசு இவர் பூமியை அஸ்திபாரப்படுத்தி அதற்கு அளவு குறித்தவர் அதின் மேல் நூல் போட்டு அதின் கோடிக்கல்லை வைத்தவர் கர்த்தர் இயேசு தண்ணீர்களைக் கைப்பிடியால் அளந்து வானங்களை ஜாணளவாக்கி பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி மலைகளைத் தராசால் நிறுத்த தேவன் இம்மட்டும் வா மிஞ்சிவராதே என சமுத்திரத்திற்குக் கட்டளையிட்டு அலைகள் மோதி அடித்தாலும் மேற்கொள்ளாத படி மணலை எல்லையாய் வைத்தவர் தராசில் படிந்த தூசி போலவும் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும் ஒன்றுமில்லா சூனியமாகவும் ஜனங்கள் யாவரும் தேவன் முன் இருக்கின்றனர் மகா பராக்கிரமசாலியான தேவன் தீவுகளை அது தூக்குகிறார் மனுஷர் மேல் அவர் ஊதவே அவர்கள் பட்டு ஓர் துரும்பு போல் பறந்து போவார் கர்த்த பயப்படத்தக்க தேவன் மகா பயங்கரமான தேவன் தமது ஜனங்களுக்காய் யுத்தம் செய்யும் சர்வ வல்லமையின் தேவன் சர்வத்தையும் படைத்த தேவன் சர்வாதிகார முடைய தேவன் ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிற அதிசய தேவன் கர்த்த இருந்தவரும் இருக்கிறவரும் வருகின்ற வருமான கர்த்தர் இவர் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமான தேவன் பரிசுத்தமும் சத்தியமும் நீதியும் நிறைந்த தேவன் பாவிகட்கு நரகையும் தம் பரிசுத்தர்க்கு பரலோகையும் அளிக்கும் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Palattha Seyalkalai Yaavarum Enni Makizhnthituvom Paralokin Devanin Makimaiyaana Seyalkalaith Thinamum Enni Vaanam Singkaasanamaayum Poomi Paadhappatiyumaay Konda Makaaperiya Devanaam Kiristhu Yesu Ivar Poomiyai Asthipaarappatutthi Adharku Alavu Kuritthavar Athin Mael Nool Pottu Athin Kotikkallai Vaitthavar Kartthar Yesu Thanneerkalaik Kaippitiyaal Alanthu Vaananggalai Jaanalavaakki Poomiyin Mannai Marakkaalil Adakki Malaigalaith Tharaasaal Niruttha Devan Immattum Vaa Minjsivaraathae Ena Samutthiratthirkuk Kattalaiyittu Alaigal Mothi Atitthaalum Maerkollaadha Pati Manalai Ellaiyaay Vaitthavar Tharaasil Patindha Thoosi Polavum Aertrachsaalil Thongkum Thulipolavum Onrumillaa Sooniyamaagavum Jananggal Yaavarum Devan Mun Irukkindranar Makaa Paraakkiramasaaliyaana Devan Theevugalai Athu Thookkukiraar Manushar Mael Avar Oodhavae Avarkal Pattu Or Thurumpu Pol Paranthu Povaar Karttha Payappatatthakka Devan Makaa Payanggaramaana Devan Thamathu Jananggalukkaay Yuttham Seyyum Sarva Vallamaiyin Devan Sarvatthaiyum Pataittha Devan Sarvaathikaara Mutaiya Devan Oruvaraayp Periya Athisayanggalaich Seykira Athisaya Devan Karttha Irundhavarum Irukkiravarum Varukindra Varumaana Kartthar Ivar Alpaavum Omekaavum Aathiyum Andhamumaana Devan Parisutthamum Satthiyamum Neethiyum Niraindha Devan Paavigatku Narakaiyum Tham Parisuttharkku Paralokaiyum Alikkum Devan