பாடல் #37781
கர்த்தர் சபையே கர்த்தரின் சபையே
🔤 Kartthar Sapaiyae Karttharin Sapaiyae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் சபையே கர்த்தரின் சபையே களிகூர்ந்து மகிழ்ந்திடுவாய் கர்த்தராம் இயேசு தமது சபையை இதோ சேர்க்க வருகின்றார் ஆ! ஆ கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாதது கர்த்தர் சபை பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையானது சபை ஆ! ஆ இரட்சிக்கப்பட்டோரின் சங்கமே கர்த்தரின் சபையாகும் பரிசுத்தவான்களின் சங்கமே தேவனின் சபையாகும் ஆ! ஆ பரலோகில் பெயரெழுதியிருக்கிற முதற்பேறானோரின் சர்வ சங்கமாகிய சபையே கர்த்தரின் சபையாகும் ஆ! ஆ தேவன் தமது சுய இரத்தம் சிந்தியே சம்பாதித்துக் கொண்ட தமது சபையே நீதிமான்களின் சங்கமாம் சபையாகும் ஆ! ஆ சத்தியத்திற்கு தூணும் ஆதாரமும் ஆனது கர்த்தர் சபை ஜீவனுள்ள தேவனின் வீடாம் கர்த்தருடைய சபை ஆ! ஆ 2 ஊழியங்களையும் ஆளுகைகளையும் பற்பல பாஷைகளையும் பிரித்தெடுக்கப்பட்ட ஊழியர்களையும் கொண்டது கர்த்தர் ஆ! ஆ பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப் பெற்றதும் திட அஸ்திபாரமானதும் சீயோனில் வைத்த மூலைக்கல்லாகிய கிறிஸ்துவே சபைத் தலைவர் ஆ ஆ சபையின் தலைவராம் கிறிஸ்து இயேசுவைப் பரிபூரணமாகவே விசுவாசிக்கிறவன் எவனும் பதறவே மாட்டான் ஆ! ஆ கிறிஸ்து இயேசுவும் கல்லின் மேல் கட்டப்பட்ட சபையை பாதாளத்தின் வாசல்கள் எதுவும் மேற்கொள்வதில்லை ஆ! ஆ இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கி போவான் இந்தக்கல் எவன் மேல் விழுமோ அவன் நசுங்கியே போவான் ஆ! ஆ கர்த்தர் தமது திரு சரீரமாம் தமது சபைக்கு அற்புதங்கள் குணமாக்கும் வரங்கள் அதிகமாய் அளிக்கின்றார் ஆ! ஆ கர்த்தரின் வருகையின் நாளானது சமீபித்து வருவதால் சபை கூடி வருதலை ஒருவருமே விட்டு விடாதிருங்கள் ஆ! ஆ மகா சபையாம் கர்த்தரின் சபையே களிகூர்ந்து மகிழ்ந்திரு மகிபனாம் இயேசுவின் திரு வருகையை எதிர்நோக்கிக் காத்திரு ஆ! ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Sapaiyae Karttharin Sapaiyae Kalikoornthu Makizhnthituvaay Karttharaam Yesu Thamathu Sapaiyai Itho Saerkka Varukinraar Aa! Aa Karaithirai Mudhalaanavaigal Onrum Illaadhathu Kartthar Sapai Parisutthamum Pizhaiyartrathumaana Makimaiyaanathu Sapai Aa! Aa Iratsikkappattorin Sanggamae Karttharin Sapaiyaakum Parisutthavaankalin Sanggamae Devanin Sapaiyaakum Aa! Aa Paralokil Peyarezhuthiyirukkira Mudharpaeraanorin Sarva Sanggamaakiya Sapaiyae Karttharin Sapaiyaakum Aa! Aa Devan Thamathu Suya Rattham Sinthiyae Sampaathitthuk Konda Thamathu Sapaiyae Neethimaankalin Sanggamaam Sapaiyaakum Aa! Aa Satthiyatthirku Thoonum Aathaaramum Aanathu Kartthar Sapai Jeevanulla Devanin Veetaam Karttharutaiya Sapai Aa! Aa 2 Oozhiyanggalaiyum Aalukaigalaiyum Parpala Paashaigalaiyum Piritthetukkappatta Oozhiyarkalaiyum Kondathu Kartthar Aa! Aa Pareetsikkappattathum Vilaiyaerap Pertrathum Thida Asthipaaramaanathum Seeyonil Vaittha Moolaikkallaakiya Kiristhuvae Sapaith Thalaivar Aa Aa Sapaiyin Thalaivaraam Kiristhu Yesuvaip Paripooranamaagavae Visuvaasikkiravan Evanum Patharavae Maattaan Aa! Aa Kiristhu Yesuvum Kallin Mael Kattappatta Sapaiyai Paathaalatthin Vaasalkal Ethuvum Maerkolvathillai Aa! Aa Indhak Kallin Mael Vizhukiravan Norungki Povaan Indhakkal Evan Mael Vizhumo Avan Nasungkiyae Povaan Aa! Aa Kartthar Thamathu Thiru Sareeramaam Thamathu Sapaikku Arpudhanggal Kunamaakkum Varanggal Athigamaay Alikkinraar Aa! Aa Karttharin Varukaiyin Naalaanathu Sameepitthu Varuvathaal Sapai Kooti Varudhalai Oruvarumae Vittu Vitaathirunggal Aa! Aa Makaa Sapaiyaam Karttharin Sapaiyae Kalikoornthu Makizhnthiru Makibanaam Yesuvin Thiru Varukaiyai Ethirnokkik Kaatthiru Aa! Aa