பாடல் #37778
அற்புதம் அற்புதம் அற்புதமே
🔤 Arpudham Arpudham Arpudhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் அற்புதம் அற்புதமே ஆண்டவர் நாமத்தினால் அற்புத நாதன் அன்பராம் இயேசு அற்புதம் செய்திடுவார் - ஆ! ஆ பாடையைத் தொட்டு பாலகனை பலத்துடன் எழும்பச் செய்தார் தாயினைத் தேற்ற தற்பரனேசு அற்புதம் செய்தனரே - ஆ! ஆ அற்புதம் செய்திடும் தற்பரன் பற்பல நோய்களையும் அற்புத சக்தி வெளிப்படச் செய்து ஆரோக்கியம் அளித்தார் - ஆ! ஆ ! கானாவூர் கல்யாண வீட்டிலே கர்த்தரும் சென்றனரே கலக்கங்கள் நீங்க கவலைகள் போக நவரசம் கொடுத்தனரே - ஆ! ஆ ! குஷ்ட ரோகத்தைக் குணமாக்கினார் கஷ்டங்களை நீக்கினார் வார்த்தையினாலே வாதைகள் தீர்த்து வல்லமை காண்பித்தாரே - ஆ! ஆ! மரித்த லாசரு உயிர்த்தெழும்ப மரணத்தை அழிப்பவராய் மகிமையைக் காண்பாய் விசுவாசி யென்றார் மகிபரை நம்பிடுவோம் ஆ! ஆ கல்லறை திறந்திட கற்பித்தாரே, அற்புதம் செய்திடவே லாசருவே நீ வந்திடு என்றார் லாசரு உயிர்த்தெழுந்தான் - ஆ! ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Arpudham Arpudhamae Aandavar Naamatthinaal Arpudha Naadhan Anbaraam Yesu Arpudham Seythituvaar - Aa! Aa Paataiyaith Thottu Paalakanai Palatthudan Ezhumbach Seythaar Thaayinaith Thaertra Tharparanaesu Arpudham Seythanarae - Aa! Aa Arpudham Seythitum Tharparan Parpala Noykalaiyum Arpudha Sakthi Velippatach Seythu Aarokkiyam Alitthaar - Aa! Aa ! Kaanaavoor Kalyaana Veettilae Karttharum Sendranarae Kalakkanggal Neengga Kavalaigal Poga Navarasam Kotutthanarae - Aa! Aa ! Kushta Rogatthaik Kunamaakkinaar Kashtanggalai Neekkinaar Vaartthaiyinaalae Vaathaigal Theertthu Vallamai Kaanpitthaarae - Aa! Aa! Marittha Laasaru Uyirtthezhumba Maranatthai Azhippavaraay Makimaiyaik Kaanpaay Visuvaasi Yenraar Makibarai Nampituvom Aa! Aa Kallarai Thiranthida Karpitthaarae, Arpudham Seythidavae Laasaruvae Nee Vanthitu Enraar Laasaru Uyirtthezhunthaan - Aa! Aa