பாடல் #37777
பரிகாரியாகிய பரிசுத்தர்
🔤 Parikaariyaakiya Parisutthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிகாரியாகிய பரிசுத்தர் இயேசு சுகம் அளிப்பவர் என்றறிந்திடுவாய் நோய்களை நீக்கி பிராணனைக் காப்பவர் இயேசுவை அன்றி ஒருவரும் இல்லையே மானிடர்க்காக மானிடனாக மகிமையின் தேவன் உதித்தனரே மானிலம் தனிலே வல்லமையோடு சுகம் அளிப்பவராய்க் கிரியை செய்தனரே அசுத்த ஆவிகள் அனைத்தையும் துரத்தி சகல நோய்களையும் குணமாக்கினார் செவிடர்கள் கேட்கவும் ஊமையர் பேசவும் முடவர்கள் குதிக்கவும் குணமாக்கினாரே சந்திரரோகத்தைக் குணமாக்கினாரே சத்திய பரனாம் இயேசு தேவன் அற்புத சுகத்தை அளித்தனர் அவரே அற்புதர் அவர் நாமத்தைத் துதிப்போம் குஷ்டரோகத்தைக் குணமாக்கினாரே மரித்தோர் உயிர்த்தெழச் செய்தனரே பூரண சுகத்தை அளிப்பவர் இயேசு புவிதனில் உன்னைக் குணமாக்குபவரே பாவங்கள் போக்கி பாவியாம் உன்னை பரிசுத்தம் செய்திடுவார் அவரே பரலோக ராஜ்ஜிய பதவிக்காக உன்னை பரிசுத்த ஆவியால் அபிஷேகித்திடுவார் சுகமும் பெலமும் சந்தோஷமும் தர இயேசுவை நீ இன்று விசுவாசிப்பாய் அவர்தம் கிருபையால் நிறைத்திடுவாரே சுகத்துடன் வாழ அருள் புரிவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parikaariyaakiya Parisutthar Yesu Sugam Alippavar Endrarinthituvaay Noykalai Neekki Piraananaik Kaappavar Yesuvai Anri Oruvarum Illaiyae Maanidarkkaaga Maanidanaaga Makimaiyin Devan Uthitthanarae Maanilam Thanilae Vallamaiyotu Sugam Alippavaraayk Kiriyai Seythanarae Asuttha Aavigal Anaitthaiyum Thuratthi Sakala Noykalaiyum Kunamaakkinaar Sevidarkal Kaetkavum Oomaiyar Paesavum Mudavarkal Kuthikkavum Kunamaakkinaarae Santhirarogatthaik Kunamaakkinaarae Satthiya Paranaam Yesu Devan Arpudha Sugatthai Alitthanar Avarae Arpudhar Avar Naamatthaith Thuthippom Kushtarogatthaik Kunamaakkinaarae Maritthor Uyirtthezhach Seythanarae Poorana Sugatthai Alippavar Yesu Puvidhanil Unnaik Kunamaakkubavarae Paavanggal Pokki Paaviyaam Unnai Parisuttham Seythituvaar Avarae Paraloga Raajjiya Pathavikkaaga Unnai Parisuttha Aaviyaal Apishaekitthituvaar Sugamum Pelamum Santhoshamum Thara Yesuvai Nee Inru Visuvaasippaay Avartham Kirupaiyaal Niraitthituvaarae Sugatthudan Vaazha Arul Purivaar