பாடல் #37774
தேவா உம் அன்பை
🔤 Thaevaa Um Anpai
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம் அன்பை ஒருபோதும் மறவேனே ஆழக் குழியின் பாவச் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்த இயேசு தேவா பாவ அந்தகாரத்துக்குள்ளும் மரண இருளுக்குள்ளும் கதியற்றிருந்த என்னைக் கைகொடுத்தாதரித்தீர் - இயேசு தேவா பாவத்தால் இறுகக் கட்டப்பட்டுப் பரிதபித்த எந்தன் பாவக் கட்டுகளையறுத்துக் கிருபையாய் விடுவித்தீர் பாவ பாரச் சுமையின் பாரத்தால் மிக நொந்து தத்தளித்த எந்தன் பாரச் சுமை நீர் ஏற்றீர் இயேசு தேவா வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற யாவரும் என்னிடத்தில் வாருங்கள்: இளைப்பாறுதல் தருவேன் என்றீர் எண்ணிமுடியாத என் பாவங்களையெல்லாம் கிருபையாய் மன்னித்துச் சமுத்திர ஆழத்தில் போட்டுவிட்டீர் பரலோகில் எனைச் சேர்க்கப் பாடுகள் பட்டவரே இயேசு தேவா பரம தந்தையாம் பரிசுத்த கர்த்தரே உமக்குப் பயந்து உமது கிருபைக்குக் காத்திருப்பவர்கள் மேல் நீர் பிரியமாயிருக்கிறீர் வியாதிப் படுக்கையில் தாங்கிடும் தேவனே பரம வைத்தியராம் கிறிஸ்து இயேசு நாதரே போக்கிலும் வரத்திலும் எப்போதும் என்னோடு கூட இருந்து பாதுகாக்கும் தேவனே எந்தனின் ஜெபத்தை எப்போதும் கேட்கிற என் அருமைப் பிதாவை என்றுமே மறவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Um Anpai Orupothum Maravaenae Aazhak Kuzhiyin Paavach Saerrininrennaith Thookkiyetuttha Yesu Thaevaa Paava Andhakaaratthukkullum Marana Irulukkullum Kathiyarrirundha Ennaik Kaikotutthaadharittheer - Yesu Thaevaa Paavatthaal Irugak Kattappattup Paridhapittha Endhan Paavak Kattugalaiyarutthuk Kirupaiyaay Vituvittheer Paava Paarach Sumaiyin Paaratthaal Miga Nonthu Thatthalittha Endhan Paarach Sumai Neer Aerreer Yesu Thaevaa Varutthappattup Paaram Sumakkira Yaavarum Ennidatthil Vaarunggal: Ilaippaarudhal Tharuvaen Enreer Ennimutiyaadha En Paavanggalaiyellaam Kirupaiyaay Mannitthuch Samutthira Aazhatthil Pottuvitteer Paralokil Enaich Saerkkap Paatugal Pattavarae Yesu Thaevaa Parama Thanthaiyaam Parisuttha Karttharae Umakkup Payanthu Umathu Kirupaikkuk Kaatthiruppavarkal Mael Neer Piriyamaayirukkireer Viyaathip Patukkaiyil Thaangkitum Devanae Parama Vaitthiyaraam Kiristhu Yesu Naadharae Pokkilum Varatthilum Eppothum Ennotu Kooda Irunthu Paathukaakkum Devanae Endhanin Jebatthai Eppothum Kaetkira En Arumaip Pithaavai Enrumae Maravaenae