பாடல் #37770
ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்
🔤 Aavalotu Kaelunggal Arulvaen
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவலோடு கேளுங்கள் அருள்வேன் என்றீரே தாகத்தோடு தேடுங்கள் தருவேன் என்றீரே வல்லமையளிக்கும் தேவா வல்லமை தாரும் நல்ல ஆவியே இப்போ எம் உள்ளத்தில் வாரும் நாயகன் வரவின் காலம் நண்ணிவிட்டதே பேயதின் கொடூரமோ பெருகி விட்டதே சோதனை அதிகமாக மோதுகின்றதே பாதகப் பிசாசின் அம்பு பாய்ந்து செல்லுதே அன்பு லோகமெங்குமே குறைந்துவிட்டதே வம்பர் கூட்டமோ மிக வளர்ந்து விட்டதே பக்தி விசுவாசமும் பறந்துவிட்டதே சத்திய வசனவாஞ்சை சாலக்குன்றிற்றே வாலிபர் கன்னிகைகளும் வல்லமைபெற பாலியர் முதியோர்களும் பாடிப்போற்றிட ஏசுநாமம் எங்குமே பரம்பிவாழ்ந்திட நேசரின் சபைகளோங்கியே வளர்ந்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aavalotu Kaelunggal Arulvaen Enreerae Thaagatthotu Thaetunggal Tharuvaen Enreerae Vallamaiyalikkum Thaevaa Vallamai Thaarum Nalla Aaviyae Ippo Em Ullatthil Vaarum Naayakan Varavin Kaalam Nannivittathae Paeyathin Kotooramo Peruki Vittathae Sodhanai Athigamaaga Mothukindrathae Paadhakap Pisaasin Ampu Paaynthu Selluthae Anpu Logamengkumae Kurainthuvittathae Vambar Koottamo Miga Valarnthu Vittathae Pakthi Visuvaasamum Paranthuvittathae Satthiya Vasanavaanjsai Saalakkunrirrae Vaalibar Kannikaigalum Vallamaipera Paaliyar Muthiyorkalum Paatipporrida Aesunaamam Engkumae Parampivaazhnthida Naesarin Sapaigalongkiyae Valarnthida