பாடல் #37769
அருளின் மாமழை பெய்யும்
🔤 Arulin Maamazhai Peyyum
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே மாரியாய்ப் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே தேவன்பின் வெள்ளம் தேவன்பின் வெள்ளம் தேவை கொஞ்சம் ருசித்த என் உள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை கற்பாறைபோல் பாவி உள்ளம் கடினப்பட்டதையோ பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதல்லோ வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறுமென்றீர் சாபத்துள்ளான முட்பூண்டும் கேதுரு வாகுமென்றீர் தேசத்தின் இருளைப் பாரும் லோகத்தின் மெய்த்தீபமே ஆவியின் அருளைத் தாரும் மனம் மாற்ற வல்லவரே ஏழையென் குறைகள் யாவும் தீர்த்திடும் வல்லவரே யுத்தத்தில் முன்செல்ல ஏவும் சேனைத் தளகர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arulin Maamazhai Peyyum Enru Vaakkalitthorae Maariyaayp Peythidach Seyyum Logatthin Iratsakarae Devanpin Vellam Devanpin Vellam Thaevai Konjjam Rusittha En Ullam Kenjsuthae Innum Thaevai Karpaaraipol Paavi Ullam Katinappattathaiyo Parisutthaaviyin Vellam Karaikka Vallathallo Vettaandharai Nilanthaanum Aethaenpol Maarumenreer Saabatthullaana Mutpoontum Kaethuru Vaakumenreer Thaesatthin Irulaip Paarum Logatthin Meyttheebamae Aaviyin Arulaith Thaarum Manam Maartra Vallavarae Aezhaiyen Kuraigal Yaavum Theertthitum Vallavarae Yutthatthil Munsella Aevum Saenaith Thalakarttharae