பாடல் #37765
இயேசுவே எங்கள் தேவனே
🔤 Yesuvae Enggal Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எங்கள் தேவனே உம் கிரியைகளை அடியார் கண்டு களிகூரக் கிருபை செய்வீரே உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் தேவாதி தேவனே உடனே கிரியைகளைச் செய்வீர் எங்கள் இயேசு தேவனே கிரியைகளை அடியார் காணக் கிருபை செய்வீரே இயேசுவே உம் மா உன்னதக் கிரியைகளைக் கண்களால் கண்டு களிகூர்ந்திடவே கிருபை செய்வீரே இயேசுவே உம் மா பெரிய கிரியைகளைக் காதுகளால் கேட்டு மகிழ்ந்திடவே நீர் கிருபை செய்வீரே இயேசுவே உம் அதிசயக் கிரியைகளை நாவுகளால் பேசி மகிழ்ந்தானந்திக்கக் கிருபை செய்வீரே ஊமையரும் செவிடரும் குருடரும் சுகமடைவதைக் கண்ணால் கண்டு களித்திடவே கிருபை செய்வீரே ஊனரும் சப்பாணிகளும் குதித்து நடப்பதைக் கண்ணால் கண்டு பிரமிக்கக் கிருபை செய்வீரே மரித்தவர்கள் உயிரடைந்து எழுந்து நடப்பதைக் கண்ணால் கண்டு அதிசயிக்கக் கிருபை செய்வீரே குஷ்டரோகிகள் சுத்தமாகி மாம்சம் நிறம் மாறுவதைக் கண்ணால் கண்டு பூரிக்கவே கிருபை செய்வீரே உலகம் முழுதும் உம் கிரியைகள் நடப்பதைக் கண்டும் கேட்டும் பிரமித்திடவே கிருபை செய்வீரே உலகம் முழுதும் உம் சுவிசேஷம் பிரபலம் அடைவதை அடியார் கண்டு ஆனந்திக்கக் கிருபை செய்வீரே இரட்சிப்பின் கெம்பீர சத்தம் எங்கும் முழங்குவதை கண்டும் கேட்டும் பூரிக்கவே கிருபை செய்வீரே உடனே அடியார்களின் இருதயம் உம் மாபெரும் கிரியைகளால் கொழுந்து விட்டு எரிந்திடவே கிருபை செய்வீரே பரலோகத்தின் சந்தோஷத்தைப் பூலோகிலும் அடியார் கண்டு ஆனந்திக்கவே நீர் கிருபை செய்வீரே உடனே ஆச்சர்யத்தால் ஆர்ப்பரித்து ஆடிப்பாடிக் களித்து ஆனந்தத்தால் குதித்திடவே கிருபை செய்வீரே அற்புதங்கள் அடையாளங்கள் பயங்கரக் கிரியைகளை அடியார் கண்டு பிரமிக்கவே கிருபை செய்வீரே உடனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Enggal Devanae Um Kiriyaigalai Atiyaar Kantu Kalikoorak Kirupai Seyveerae Udanae Kiriyaigalaich Seyveer Enggal Thaevaathi Devanae Udanae Kiriyaigalaich Seyveer Enggal Yesu Devanae Kiriyaigalai Atiyaar Kaanak Kirupai Seyveerae Yesuvae Um Maa Unnathak Kiriyaigalaik Kankalaal Kantu Kalikoornthidavae Kirupai Seyveerae Yesuvae Um Maa Periya Kiriyaigalaik Kaathugalaal Kaettu Makizhnthidavae Neer Kirupai Seyveerae Yesuvae Um Athisayak Kiriyaigalai Naavugalaal Paesi Makizhnthaananthikkak Kirupai Seyveerae Oomaiyarum Sevidarum Kurudarum Sugamataivathaik Kannaal Kantu Kalitthidavae Kirupai Seyveerae Oonarum Sappaanigalum Kuthitthu Natappathaik Kannaal Kantu Piramikkak Kirupai Seyveerae Maritthavarkal Uyiratainthu Ezhunthu Natappathaik Kannaal Kantu Athisayikkak Kirupai Seyveerae Kushtarokigal Sutthamaaki Maamsam Niram Maaruvathaik Kannaal Kantu Poorikkavae Kirupai Seyveerae Ulakam Muzhuthum Um Kiriyaigal Natappathaik Kantum Kaettum Piramitthidavae Kirupai Seyveerae Ulakam Muzhuthum Um Suvisaesham Pirapalam Ataivathai Atiyaar Kantu Aananthikkak Kirupai Seyveerae Iratsippin Kempeera Sattham Engkum Muzhangkuvathai Kantum Kaettum Poorikkavae Kirupai Seyveerae Udanae Atiyaarkalin Irudhayam Um Maaperum Kiriyaigalaal Kozhunthu Vittu Erinthidavae Kirupai Seyveerae Paralogatthin Santhoshatthaip Poolokilum Atiyaar Kantu Aananthikkavae Neer Kirupai Seyveerae Udanae Aaccharyatthaal Aarpparitthu Aatippaatik Kalitthu Aanandhatthaal Kuthitthidavae Kirupai Seyveerae Arpudhanggal Ataiyaalanggal Payanggarak Kiriyaigalai Atiyaar Kantu Piramikkavae Kirupai Seyveerae Udanae