பாடல் #3775
யேசையர் தயை கூர வா
🎙 கிறிஸ்தவ பாடல்
1. யேசையர் தயை கூர வா! பாவி வா! மெய்ப்பக்தர் ஜெபம் செய்ய வா! பாவி வா! இந்நேரம் கிட்டிச் சேர வா! பாவி வா! இச்சணம் நெஞ்சம் தேற வா! பாவி வா! 2. மா பாரம் சுமந்தாலும் வா! பாவி வா! யேசாலே லகுவாகும் வா! பாவி வா! ஏற்பாரே நேசமாக வா! பாவி வா! சேர்ப்பாரே தயவாக வா! பாவி வா! 3. அன்போ டழைக்கிறாரே வா! பாவி வா! பேர்நன்மை கொடுப்பாரே வா! பாவி வா! சோராமல் ஆசையோடு வா! பாவி வா! அஞ்சா துற்சாகத்தோடு வா! பாவி வா!