பாடல் #37739
பாலைவனத்தில் சஞ்சரித்தாலும்
🔤 Paalaivanatthil Sanjjaritthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலைவனத்தில் சஞ்சரித்தாலும் பாக்யவான்கள் நாம் சுயாதீனர் (2) பாலும் தேனும் பாய்ந்தோடுகின்ற பரம கானானின் சுதந்திரர் (2) 1. நாமோ தேவனின் புத்திரர் - இங்கு நிலையான நகரம் நமக்கு இல்லை (2) வரப்போவதையே நாடுகிறோம் (2) வெகு வாஞ்சையுடன் நாம் தேடுகிறோம் (2) 2. நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகவில்லை - நாம் கலக்கமடைந்தும் மனம் முறியவில்லை துன்பப் படும் கைவிடப்படவில்லை - கீழே தள்ளப்பட்டாலும் மடியவில்லை 3. அதிகமாய் நம்மைத் தாக்கும் துன்பம் - இங்கே அதிசீக்கிரத்தில் நீங்கிப் போகும் ஆழத்தில் அமிழ்த்தின உபத்திரவம் - மிக அதிக நித்திய கன மகிமை தரும் 4. துக்கப்படும் நம் துயர் துடைப்பார் - அவர் வெட்கப்பட்டோர் வேதனை நீக்குவார் கண்ணீரின் கண்கள் கர்த்தரைக் காணும் - அங்கே கண்ணாடி கடலோரம் களிகூரும் 5. தேவபக்தியாய் வாழ வாஞ்சிப்போர் - இங்கு துன்பப்பட வேண்டிய தவசியமே அழியும் பொன்னிலும் அதி மேலான - விசுவாசம் அதிக புகழ்ச்சி பெறும் 6.இளைப்பாறுதல் எல்லாம் நமக்கு அங்கே இன்னும் பொதாக்காலமே பாடு இங்கே போனால் மீண்டும் வருவதில்லை - இனி தேவனும் நாமும் பிரிவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalaivanatthil Sanjjaritthaalum Paakyavaankal Naam Suyaatheenar (2) Paalum Thaenum Paaynthotukindra Parama Kaanaanin Sudhanthirar (2) 1. Naamo Devanin Putthirar - Ingku Nilaiyaana Nakaram Namakku Illai (2) Varappovathaiyae Naatukirom (2) Veku Vaanjsaiyudan Naam Thaetukirom (2) 2. Nerukkappattum Otungkippogavillai - Naam Kalakkamatainthum Manam Muriyavillai Thunbap Patum Kaividappatavillai - Keezhae Thallappattaalum Matiyavillai 3. Athigamaay Nammaith Thaakkum Thunbam - Ingkae Athiseekkiratthil Neengkip Pokum Aazhatthil Amizhtthina Ubatthiravam - Miga Athiga Nitthiya Kana Makimai Tharum 4. Thukkappatum Nam Thuyar Thutaippaar - Avar Vetkappattor Vaedhanai Neekkuvaar Kanneerin Kankal Karttharaik Kaanum - Angkae Kannaati Kataloram Kalikoorum 5. Thaevapakthiyaay Vaazha Vaanjsippor - Ingku Thunbappata Vaentiya Thavasiyamae Azhiyum Ponnilum Athi Maelaana - Visuvaasam Athiga Pugazhchsi Perum 6.ilaippaarudhal Ellaam Namakku Angkae Innum Pothaakkaalamae Paatu Ingkae Ponaal Meentum Varuvathillai - Ini Devanum Naamum Pirivathillai