பாடல் #37716
அவர் தோள்களின் மேலே ( அவர் வார்த்தையின் மேலே)
🔤 Avar Tholkalin Maelae ( Avar Vaartthaiyin Maelae)
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் (அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்) கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்துக் கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே -2 யேகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யேகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே -2 1. மரண இருளின் பள்ளதாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் -2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் -2 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டு கொண்டாரே -2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Tholkalin Maelae Naan Saaynthiruppathaal (avar Vaartthaiyin Maelae Naan Saarnthiruppathaal) Kavalai Onrum Enakkillaiyae En Thaevaigalellaam Avar Paartthuk Kolvathaal Naan Karttharukkul Makizhnthiruppaenae -2 Yaekovaayeerae Endhan Devan Thaevaigal Yaavum Santhippeerae Yaekovaa Raahpaa Endhan Devan Ennaalum Sugam Tharuveerae -2 1. Marana Irulin Pallathaakkil Natakka Naernthaalum En Appaa Ennotiruppathaalae Payappatamaattaen -2 Enakku Virodhamaay Aayiranggalum Pathinaayiranggal Ezhunthaalum Anjsidamaattaen -2 2. Nerukkatthilae Karttharai Nokki Kooppittaen Ennai Visaalatthil Kontuvanthu Meettu Kontaarae -2 En Patsatthil Kartthar Iruppathinaalae Orupothum Naan Asaikkappatuvathillaiyae -2