பாடல் #3771
யேசுவைப் பார்த்து நட என் நேசா
🔤 Yaesuvaip Paartthu Nata En Naesaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசுவைப் பார்த்து நட என் நேசா யேசுவைப் பார்த்து நட. 1. நமது பாவங்களுக்காக மரித்து - நாம் நடந்திட வழிகாட்டி முன்சென்ற 2. தீமைக்குத் தீமை செய்தாரோ? - தமைச் சிலுவையிலறைந் தோர்க்காய் ஜெபித்தாரே 3. சண்டை கூக்குரல் செய்யாரே - தம் சத்தத்தை வீதியில் காட்டாரே. 4. நெரிந்த நாணலை முறியாரே - மங்கி எரிந்த திரியை அவியாரே. 5. பாடுபடுகையில் பயமுறுத்தலையே அவர் பயங்கரச் சாபங்கள் தான் இடவில்லையே 6. உருக்க இரக்கங்கள் உள்ளாரே அவர் செவிடு குருடூமையைத் தள்ளாரே. 7. நன்மை செய்வதிலவர் ஓய்ந்ததுமில்லை அவர் நாட்களை வீணில் கழித்ததுமில்லை. 8. பரிசுத்த மார்க்கம் காட்டினாரே - கெட்ட பாவ சோதனைகளை வென்றனரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesuvaip Paartthu Nata En Naesaa Yaesuvaip Paartthu Nata. 1. Namathu Paavanggalukkaaga Maritthu - Naam Natanthida Vazhikaatti Munsendra 2. Theemaikkuth Theemai Seythaaro? - Thamaich Siluvaiyilarain Thorkkaay Jepitthaarae 3. Santai Kookkural Seyyaarae - Tham Satthatthai Veethiyil Kaattaarae. 4. Nerindha Naanalai Muriyaarae - Mangki Erindha Thiriyai Aviyaarae. 5. Paatubatukaiyil Payamurutthalaiyae Avar Payanggarach Saabanggal Thaan Idavillaiyae 6. Urukka Irakkanggal Ullaarae Avar Sevitu Kurutoomaiyaith Thallaarae. 7. Nanmai Seyvathilavar Oyndhathumillai Avar Naatkalai Veenil Kazhitthathumillai. 8. Parisuttha Maarkkam Kaattinaarae - Ketta Paava Sodhanaigalai Vendranarae