பாடல் #3769
யேசுவை அன்றி
🔤 Yaesuvai Anri
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ, மனமே? - அவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே, மோசம் போவதேன், மனமே? 1.ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார், மனமே? - கொடும் யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய போதகம் செய்ததார், மனமே? - யேசு 2.இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது சிந்தை தெளிந்திருந்தும், மனமே - ஐயோ! பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அலைந்து திரிவதேன், மனமே? - யேசு 3.பூதல மீதினில் ஓதரி தாம் பரஞ் சோதியைப் போற்றிசெய் மனமே; - செய்தால், பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று வேதமுரைக்கு தல்லோ மனமே? - யேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesuvai Anri Vaeroru Ratsakar Kaasini Thanilunto, Manamae? - Avar Naesamarinthu Visuvaasam Illaamalae, Mosam Povathaen, Manamae? 1.aadham Aevai Seytha Paadhakam Tholainthidap Poodhalam Vandhathaar, Manamae? - Kotum Yoodharkalaal Pala Vaathaigal Kontu Thivya Podhakam Seythathaar, Manamae? - Yaesu 2.indha Vaazhvu Kana Ninthai Enrunathu Sinthai Thelinthirunthum, Manamae - Aiyo! Pandha Paasamathil Nonthu Naal Thorum Alainthu Thirivathaen, Manamae? - Yaesu 3.poodhala Meethinil Odhari Thaam Paranj Sothiyaip Porrisey Manamae; - Seythaal, Paadhakam Poy Motsa Saadhakam Aamenru Vaedhamuraikku Thallo Manamae? - Yaesu