பாடல் #37671
என் ஆசை நீர்தானைய்யா
🔤 En Aasai Neerthaanaiyyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆசை நீர்தானைய்யா நேசரே என் ஆசை நீர்தானைய்யா என் நேசரே என் தெய்வமே என் ஆசை நீர்தானைய்யா சாரோனின் ரோஜா இவர் பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே காட்டு மரங்களுள் நேச கிச்சிலி மரமாம் என்மேல் பரக்கும் நேசக்கொடியும் அவரே - என் ஆசை நீர்தானைய்யா என் நேசர் வெண்மையானவர் அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் நேசரின் கண்கள் புறாக்கண்கள் அவை எனக்காக கண்ணீர் சிந்திடும் கண்கள் - என் ஆசை நீர்தானைய்யா நான் எந்தன் நேசருடையவள் என் நேசர் என்னுடையவரே என் புறாவே என் உத்தமியே என்று சொல்லி என்னை அணைத்துக்கொள்வாரே - என் ஆசை நீர்தானைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aasai Neerthaanaiyyaa Naesarae En Aasai Neerthaanaiyyaa En Naesarae En Theyvamae En Aasai Neerthaanaiyyaa Saaronin Rojaa Ivar Pallatthaakkugalin Leeli Pushpamae Kaattu Maranggalul Naesa Kichsili Maramaam Enmael Parakkum Naesakkotiyum Avarae - En Aasai Neerthaanaiyyaa En Naesar Venmaiyaanavar Avar Pathinaayiram Paeril Sirandhavar Naesarin Kankal Puraakkankal Avai Enakkaaga Kanneer Sinthitum Kankal - En Aasai Neerthaanaiyyaa Naan Endhan Naesarutaiyaval En Naesar Ennutaiyavarae En Puraavae En Utthamiyae Enru Solli Ennai Anaitthukkolvaarae - En Aasai Neerthaanaiyyaa