பாடல் #3766
யேசுவே திருச்சபை
🔤 Yaesuvae Thirucchapai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசுவே திருச்சபை ஆலயத்தின் என்றும் நிலைக்கும் மூலைக்கல். பேசற் கரிய மூலைக்கல் அவர், பெரும் மாளிகையைத் தாங்கும் கல். - யேசுவே 1.ஆகாததென்று வீடு கட்டுவோர் அவமதித்திட்ட இந்தக் கல்; வாகாய் ஆலய மூலைக் கமைந்து வடிவாய்த் தலைக்கல்லான கல். - யேசுவே 2.ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும் அதிசயமான அன்பின் கல்; ஞாலத்துப் பல பேதைகள் தமை நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். - யேசுவே 3.ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும் உன்னத விலைபெற்ற கல்; எப்போதும் பரஞ்சோதியாய் நீதி இலங்கும் சூரியனான கல். - யேசுவே 4.காற்றுக்கும் கன மழைக்கும் அசையா கடிய மாபலமான கல்; மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத் தேற்றிச் சபையைக் காக்குங் கல். - யேசுவே 5.என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை, எழிலுறவே இக் கல்லின்மேல்; நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன் நாணம் அடையான் மெய்தானே. - யேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesuvae Thirucchapai Aalayatthin Enrum Nilaikkum Moolaikkal. Paesar Kariya Moolaikkal Avar, Perum Maalikaiyaith Thaangkum Kal. - Yaesuvae 1.aakaadhathenru Veetu Kattuvor Avamathitthitta Indhak Kal; Vaakaay Aalaya Moolaik Kamainthu Vativaayth Thalaikkallaana Kal. - Yaesuvae 2.aalayamellaam Isaivaay Inaikkum Athisayamaana Anpin Kal; Njaalatthup Pala Paethaigal Thamai Natpura Onraaych Saerkkum Kal. - Yaesuvae 3.oppillaa Arum Maatsimai Yurum Unnatha Vilaipertra Kal; Eppothum Paranjsothiyaay Neethi Ilangkum Sooriyanaana Kal. - Yaesuvae 4.kaarrukkum Kana Mazhaikkum Asaiyaa Katiya Maabalamaana Kal; Maarrik Kaliyai Aarrith Thuyaraith Thaerrich Sapaiyaik Kaakkung Kal. - Yaesuvae 5.enrum Kattuvom Indha Aalayatthai, Ezhiluravae Ik Kallinmael; Nanraay Ikkallil Nampikkai Vaippon Naanam Ataiyaan Meythaanae. - Yaesuvae