பாடல் #37629
எங்கே போவேன் நான்
🔤 Engkae Povaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே போவேன் நான் எந்தன் இயேசுவே ! யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர எவருண்டு நீரே எந்தன் தஞ்சம் தயவு காட்டுமே ! கிருபை தாருமே ! உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே ! அதை எழுத முடியாதே ! - 2 ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் ! எம் கண்கள் உம்மைத் தேடுதே ! கரங்கள் கூப்பி அழைக்குதே ! அன்பு தேவனே ! என் அருகில் வாருமே ! - 2 என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் ! அன்பாய் என்னைத் தேற்றுவீர் ! உந்தன் வார்த்தை இன்று தாருமே ! என் வழியை நீர் காட்டுமே ! எந்தன் இயேசுவே ! என் அன்பு நண்பனே ! - 2 நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் ! கனிவாய் என்னை நடத்துவீர் !
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Povaen Naan Endhan Yesuvae ! Yaaridam Solvaen Naan Endhan Paaratthai Aartravum Thaertravum Ummaip Pola Yaaruntu Anpu Kaattavum Aravanaikkavum Ummaith Thavira Evaruntu Neerae Endhan Thanjjam Thayavu Kaattumae ! Kirupai Thaarumae ! Undhan Anpai Unaraamal Naanggal Seytha Thavarugal Ennilatangkaathae ! Athai Ezhudha Mutiyaathae ! - 2 Aanaalum Mannittheer ! Mannittheer ! Thayavaay Ennai Mannittheer ! Em Kankal Ummaith Thaetuthae ! Karanggal Kooppi Azhaikkuthae ! Anpu Devanae ! En Arukil Vaarumae ! - 2 Ennaiyum Thaerruveer ! Thaerruveer ! Anpaay Ennaith Thaerruveer ! Undhan Vaartthai Inru Thaarumae ! En Vazhiyai Neer Kaattumae ! Endhan Yesuvae ! En Anpu Nanpanae ! - 2 Nitthamum Natatthuveer ! Natatthuveer ! Kanivaay Ennai Natatthuveer !