பாடல் #3762
யேசுவுக்கே நில்லும் சிலுவை வீரர்காள்
🔤 Yaesuvukkae Nillum Siluvai Veerarkaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசுவுக்கே நில்லும் சிலுவை வீரர்காள்! துகிற் கொடி விரித்து போராட்டம் பண்ணுங்கள் எல்லோருக்கும் முன்பாக யேசு தாமே போவார் யுத்தத்தில் ஜெயம் பெற நம்மை நடத்துவார். 2. யேசுவுக்காக நில்லும் அவர் இல்லாமலே போர்க் களத்தில் வீணாக முயற்சி செய்வோமே திவ்விய ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளுங்கள் அவர் போகுமிடத்தில் எங்கும் பின் செல்லுங்கள். 3. யேசுவுக்காக நில்லும் அவர் சொல் கேளுங்கள் எதைக் கற்பிக்கிறாரோ அதையே செய்யுங்கள் பகைஞருக்குப் பெலன் பெரிது என்றாலும் தைர்யம் விடாதேயுங்கள் ஜெயம் பெறுவீரே. 4. யேசுவுக்காக நில்லும் யுத்தம் சுருக்கந்தான் இன்றைக்கு ஆரவாரம் நாளைக்கு வெற்றிதான் வென்றோனுக்குக் கிரீடம் கர்த்தர் கொடுப்பாரே சொல்லடங்கா ஆனந்தம் அவரால் ஆகுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesuvukkae Nillum Siluvai Veerarkaal! Thukir Koti Viritthu Poraattam Pannunggal Ellorukkum Munpaaga Yaesu Thaamae Povaar Yutthatthil Jeyam Pera Nammai Natatthuvaar. 2. Yaesuvukkaaga Nillum Avar Illaamalae Pork Kalatthil Veenaaga Muyarsi Seyvomae Thivviya Aayudhatthaith Tharitthuk Kollunggal Avar Pokumidatthil Engkum Pin Sellunggal. 3. Yaesuvukkaaga Nillum Avar Sol Kaelunggal Ethaik Karpikkiraaro Athaiyae Seyyunggal Pakainjarukkup Pelan Perithu Enraalum Thairyam Vitaathaeyunggal Jeyam Peruveerae. 4. Yaesuvukkaaga Nillum Yuttham Surukkanthaan Inraikku Aaravaaram Naalaikku Verrithaan Venronukkuk Kireedam Kartthar Kotuppaarae Sollatangkaa Aanandham Avaraal Aakumae.