பாடல் #3761
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய். ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். 2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன் லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போ ஏற்றுக்கொள்ளுமே. ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். 3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன் என்னை ஏற்றுக் கொள்ளுமே நான் உம் சொந்தம் நீரென் சொந்தம் சாட்சியாம் தேவாவியும். ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். 4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா! அடியேனையும் அன்பு பலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும். ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். 5. இயேசுவுக்கே ஒப்புவித்தேன் திவ்ய ஜூவாலை வீசுதே பூர்ண ரட்சை பேரானந்தம் சதா ஸ்தோத்திரம் அவர்க்கே. ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் நேச ரட்சகா! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.