பாடல் #37549
உம்முடைய காருண்யம்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
உம்முடைய காருண்யம் என்னை பெரியவனாக்கும் தேவனே உம்முடைய இரட்சண்யம் என்னை சந்தோஷமாக்கும் இயேசுவே சத்தியமானவர் நீர் சத்துவமானவர் நீர் நித்திய வாழ்வினையே தந்திடும் நிர்மல ராஜனும் நீர் 1. என்னை நேசிக்க யோசிக்கும் மனிதரின் நடுவே ஆசீர்வதிக்கும் நல்ல தேவனே என் தலையை உயர்த்தும் வல்ல தெய்வமே 2. செல்வ பெருக்கை நம்பும் மனிதரின் நடுவே கிருபையை பெருகச் செய்த தேவனே - அதன் அருமையை உணரச் செய்த தெய்வமே 3. பாவ இருள் நிறைந்த மனிதரின் நடுவே பரிசுத்த வாழ்வை எனக்குத் தந்தவரே பரலோகம் செல்ல வழியாய் வந்தவரே 4. முகத்தில் முழிக்க மறுக்கும் மனிதரின் நடுவே அகத்தின் அழுக்கை எடுக்கச் செய்தவர் நிமிர்ந்து நிற்க கிருபை செய்தவர்