பாடல் #37544
ஆதிகாலை நேரத்தில் ஆண்டவரின் பாதத்தில்
🔤 Aathikaalai Naeratthil Aandavarin Paadhatthil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதிகாலை நேரத்தில் ஆண்டவரின் பாதத்தில் ஆவலாய் வருகிறேன் ஆனந்தம் அடைகிறேன் எனக்கு ஜீவமார்க்கத்தை தெரியப்படுத்துவீர் என் வலபக்கத்தில் நிழலானீர் நான் அசைக்கப்படுவதில்லை இல்லை கர்த்தரோ என் முன்னே 1. கர்த்தருக்கு காத்திருக்கிறேன் அனுதினமும் பெலனடைய விரும்புகிறேன் நான் எப்பொழுதும் இளைப்படையாமல் சோர்வடையாமல் நடந்திடுவேன் ஓடிடுவேன் என் ஓட்டத்தில் 2. அதிகாலை புதுக்கிருபைகளை பெற்றிடுவேன் சதிகார சாத்தானை முறியடித்திடுவேன் பெலனடைந்திடுவேன் ஜெயமெடுத்திடுவேன் ஜெபமே என் புயமாய் எனக்கு மாறிட 3. மேகம் போன்ற திரளான சாட்சிகளில் வேகமாய் நானும் ஒருவனாய் மாறிடவே வேதம் அறிந்திட அவரின் பாதம் அமர்ந்திட நேரமே ஓடுவேன் அதிகாலையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathikaalai Naeratthil Aandavarin Paadhatthil Aavalaay Varukiraen Aanandham Ataikiraen Enakku Jeevamaarkkatthai Theriyappatutthuveer En Valapakkatthil Nizhalaaneer Naan Asaikkappatuvathillai Illai Karttharo En Munnae 1. Karttharukku Kaatthirukkiraen Anuthinamum Pelanataiya Virumpukiraen Naan Eppozhuthum Ilaippataiyaamal Sorvataiyaamal Natanthituvaen Otituvaen En Ottatthil 2. Athikaalai Puthukkirupaigalai Perrituvaen Sathikaara Saatthaanai Muriyatitthituvaen Pelanatainthituvaen Jeyametutthituvaen Jebamae En Puyamaay Enakku Maarida 3. Maegam Pondra Thiralaana Saatsigalil Vaegamaay Naanum Oruvanaay Maaridavae Vaedham Arinthida Avarin Paadham Amarnthida Naeramae Otuvaen Athikaalaiyilae