பாடல் #37541
தேவ பாதத்தில் அமர்ந்திருந்தால்
🔤 Thaeva Paadhatthil Amarnthirunthaal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பாதத்தில் அமர்ந்திருந்தால் அயர்ந்த நித்திரையை அவர் தருவார் ஏற்ற துணையை உனக்குத் தந்து சபையை கட்டச் செய்வார் நீ சத்தியம் பேசிடுவாய் நித்தியம் சேர்ந்திடுவாய் 1. ஏற்ற காலத்தில் உயர்த்தும்படி அவரின் கரத்தில் அடங்கிடுவாய் பேசின யேசின அவர்கள் முன்னே ஏணியைப் போலாவாய் 2. கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தால் கழுகைப் போல எழும்பிடுவாய் ஓடினாலும் இளைப்படையாய் நடந்தும் சோர்ந்துவிடாய் 3. உனக்கும் எனக்கும் என்ன என்றார் என் வேலையோ இன்னும் வரவில்லையென்றார் தண்ணீரை ரசமாக மாற்றினவர் தன் வசமாய் வைத்திருந்தார் குறைவுகள் நிறைவானது - அவரின் மகிமையோ வெளியானது 4. ஒன்றுக்கும் உதவாத உன்னை எடுத்து என்றைக்கும் பயன்படச் செய்திடுவார் - உன்னை ஒடுக்க நினைத்த மனிதர் முன்னே எடுத்து நிறுத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Paadhatthil Amarnthirunthaal Ayarndha Nitthiraiyai Avar Tharuvaar Aertra Thunaiyai Unakkuth Thanthu Sapaiyai Kattach Seyvaar Nee Satthiyam Paesituvaay Nitthiyam Saernthituvaay 1. Aertra Kaalatthil Uyartthumbati Avarin Karatthil Adangkituvaay Paesina Yaesina Avarkal Munnae Aeniyaip Polaavaay 2. Karttharin Paadhatthil Kaatthirunthaal Kazhukaip Pola Ezhumpituvaay Otinaalum Ilaippataiyaay Natanthum Sornthuvitaay 3. Unakkum Enakkum Enna Enraar En Vaelaiyo Innum Varavillaiyenraar Thanneerai Rasamaaga Maarrinavar Than Vasamaay Vaitthirunthaar Kuraivugal Niraivaanathu - Avarin Makimaiyo Veliyaanathu 4. Onrukkum Udhavaadha Unnai Etutthu Enraikkum Payanbatach Seythituvaar - Unnai Otukka Ninaittha Manidhar Munnae Etutthu Nirutthituvaar