பாடல் #37537
நான் ராஜாதி ராஜாவோட பிள்ளை
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
நான் ராஜாதி ராஜாவோட பிள்ளை நான் யாரையும் தாஜா பண்ணவில்லை இயேசு நாமம் எனக்குச் சொந்தம் அவரின் ஜனமே எனக்கு பந்தம் 1. தாயின் கருவிலே ( உருவாகும் முன்னே ) - 2 உள்ளங்கையிலே ( வரைந்தீரே என்னை ) - 2 இப்படியிருக்கையிலே அவர் எப்படி கைவிடுவார் மறக்க மனிதனல்லவே என்னை நடத்தும் தேவனல்லவா 2. ஒன்றும் உதவாத ( முடமான என்னை ) - 2 என்றைக்கும் வழுவாத ( கரத்திலே தூக்கி ) - 2 உயர்த்தி வைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே அணைக்கும் தேவனல்லவா எனதனைத்திற்கும் தேவனல்லவா 3. மனிதனை நம்பாத ( எந்நாளும் தம்பி ) - 2 நம்பிக்கை வைக்காத (அவன்தானு நம்பி) -2 மனிதன் மாயையானவன் அவன் உதிர்ந்திடும் மலரானவன் உன்னை படைத்தவரோ உன்னை இறுதிவரை நடத்திடுவார் நாம ராஜாதி ராஜாவோட பிள்ளை நாம யாரையும் நம்ப தேவையில்லை இயேசு நாமம் நமக்கு சொந்தம் அவரின் ஜனமே நமக்கு பந்தம்