பாடல் #37534
என்னப்பா நீர் என்னை கண்டீரே
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
என்னப்பா நீர் என்னை கண்டீரே சொல்லத்தான் அதில் ஒன்றுமில்லையே என்னை ஆராய்ந்து பார்க்க என்னில் தகுதி ஒன்றும் இல்லை - நான் ஆகாதவனென்று தள்ளின இந்த உலகில் 1. என்னைவிட அத்தனையுமே eligible அதை சொல்லிவிட முடியாது எளிதில் அதைவிட என்னில் என்னக் கண்டீர் நான் ஆகாதவனான உலகிலே 2. நான் முளைக்கும்போதே முளையில் என்னை கிள்ளி என்னை தள்ளி வைக்க முயன்ற இந்த உலகில் எள்ளி நகையாடிய என்னை அள்ளி அணைத்த தெய்வமே 3. ஒன்றுக்கும் உதவாத என்னை என்றைக்கும் உதவும் நிலையில் வைத்தீர் பயங்கர குழியில் இருந்த என்னை நிரந்தர நிலையில் வைத்தீரே