பாடல் #37518
அறிவுக்கு எட்டாத ஸ்நேகம்
🔤 Arivukku Ettaadha Snaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறிவுக்கு எட்டாத ஸ்நேகம் தெய்வ ஸ்நேகம், நித்ய ஸ்நேகம் அளவுகள் இல்லாத ஸ்நேகம் தெய்வ ஸ்நேகம், நித்ய ஸ்நேகம் ஏதொரு மேன்மைகளும் யாதொரு தகுதிகளும் இல்லாமல் ஸ்நேகிக்கும் இயேசு என் தெய்வம் 1. தேவனை நான் மறந்தாலும் ஆதி ஸ்நேகத்தில் நான் குறைந்தாலும் கால்கள் சறுக்கிட, கதறி கூப்பிட கரம் பற்றி தூக்கினீரே என்னை ஓர் மகனாய் கருதி 2. அன்னை என்னை வெறுத்தாலும் தன் கருவில் கொல்ல நினைத்தாலும் தாயின் கருவிலும் சேதமணுகாமல் கருத்தாய் பாதுகாத்தீர் என்னை ஊழியனாய் நிறுத்த 3. நல்லோரெல்லாம் முள்ளாகி என் ஸ்நேகிதரும் பகையாகி பாதி ராவினில் பதறி விழிக்கையில் இயேசுவே உடனிருந்தீர் என்னை ஸ்நேகிதனாய் கருதி 4. வேதத்தில் தான் மகிழ்ந்திருப்பேன் அது இல்லையென்றால் அமிழ்ந்திருப்பேன் ஏற்ற வேளையில் தேற்றும் வார்த்தைகள் ஊற்றாய் சுரந்ததுவே என்னை இறுதி மட்டும் நிறுத்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arivukku Ettaadha Snaegam Theyva Snaegam, Nithya Snaegam Alavugal Illaadha Snaegam Theyva Snaegam, Nithya Snaegam Aethoru Maenmaigalum Yaathoru Thakuthigalum Illaamal Snaekikkum Yesu En Theyvam 1. Devanai Naan Maranthaalum Aathi Snaegatthil Naan Kurainthaalum Kaalkal Sarukkida, Kathari Kooppida Karam Parri Thookkineerae Ennai Or Makanaay Karuthi 2. Annai Ennai Verutthaalum Than Karuvil Kolla Ninaitthaalum Thaayin Karuvilum Saedhamanukaamal Karutthaay Paathukaattheer Ennai Oozhiyanaay Niruttha 3. Nallorellaam Mullaaki En Snaekidharum Pakaiyaaki Paathi Raavinil Pathari Vizhikkaiyil Yesuvae Udaniruntheer Ennai Snaekidhanaay Karuthi 4. Vaedhatthil Thaan Makizhnthiruppaen Athu Illaiyenraal Amizhnthiruppaen Aertra Vaelaiyil Thaerrum Vaartthaigal Oorraay Surandhathuvae Ennai Iruthi Mattum Niruttha