பாடல் #37512
தூய ஆவியே வாரும்
🔤 Thooya Aaviyae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூய ஆவியே வாரும் வெண்மை புறாவே வாரும் அன்பின் அனலாய் வந்து எம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும் எம்மை தூக்கிவிடும் தனிமையிலே சோர்ந்திருக்கும் மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளை நெருப்பாய் அழித்துவிடும் நெஞ்சினிலே சோர்வின்றி ஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும் பயத்தை போக்கிவிடும் வறுமையிலே வாடி நிற்கும் நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினை கொடையாய் பொழிந்தருளும் அன்புடனே ஆர்வமுடன் துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்ல வழியை காட்டிவிடும் பொறுமையுடன் காத்திருக்கும் உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம் ஒளியால் நிரப்பிவிடும் உம்முடனே ஒன்றிணைந்து நடந்திட பலம் தாரும்-தூய ஆவியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooya Aaviyae Vaarum Venmai Puraavae Vaarum Anpin Analaay Vanthu Emmil Apishaegam Thaarum-2 1.noy Notiyil Veezhnthirukkum Emmai Thookkivitum Thanimaiyilae Sornthirukkum Manathai Thidappatutthum Emmai Soozhum Kirumigalai Neruppaay Azhitthuvitum Nenjsinilae Sorvinri Jepitthida Varam Thaarum-thooya Aaviyae 2.aazhmanathil Patinthirukkum Payatthai Pokkivitum Varumaiyilae Vaati Nirkum Nilaiyai Agarrivitum Manam Thaetum Amaithiyinai Kotaiyaay Pozhindharulum Anpudanae Aarvamudan Thutthida Arul Thaarum-thooya Aaviyae 3.sodhanaiyai Katanthu Sella Vazhiyai Kaattivitum Porumaiyudan Kaatthirukkum Uruthiyai Thandharulum Ethirkollum Naatkalellaam Oliyaal Nirappivitum Ummudanae Onrinainthu Natanthida Palam Thaarum-thooya Aaviyae