பாடல் #3750
யேசுநாயகா வந்தாளும்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
யேசுநாயகா, வந்தாளும், - எந்நாளும் திவ்ய யேசுநாயகா, வந்தாளும். ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - யேசு 1.சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்தன் அருள் தந்த தயை போலே, அன்பாலே. - யேசு 2.உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம், நித்திய சமாதானம் உற்று வாழ, மிக வாழ. - யேசு 3.துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக மங்களம் தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. - யேசு 4.நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகிப் புத்திர சந்தானமே செழிக்கத் தழைக்க. - யேசு