பாடல் #37473
உங்க மகிமை மகிமை மகிமை
🎙 கிறிஸ்தவ பாடல்
உங்க மகிமை மகிமை மகிமை என்னை நிரப்பி மூடனுமே அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே இயேசுவே தகப்பனே என் இயேசுவே தகப்பனே என்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே விட்டதையும் நான் இழந்ததையும் திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும் அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும் அக்கினியாய் என்னை மாற்றிடுமே இரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமே என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே