பாடல் #37469
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில்
🔤 Poomikkoru Punidham Immannil
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது பரலோக தந்தையின் செல்லம் வந்தது மண்ணான என்னையும் தேடி வந்தது அகிலத்தைப் படைத்தவர் அணுவானது அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர் ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2 விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2 இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம் அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomikkoru Punidham Immannil Vandhathu Ullamellaam Santhosham Inru Pongkuthu Paraloga Thanthaiyin Sellam Vandhathu Mannaana Ennaiyum Thaeti Vandhathu Akilatthaip Pataitthavar Anuvaanathu Arivukkettaa Perum Vinthaiyithu & 2 Engga Yesu Raajaa Engga Sella Iraajaa Kanni Mari Vayirril Parisutthamaaga Piranthaar 1. Eliyonai Naesittha Maamannavar Aezhaiyin Kolatthil Piranthaaranro Arinjarin Njaanatthai Avamaakkiyae Pullanai Meethinil Piranthaaranro Ulakatthin Paavatthai Thaam Pokkavae Thaevaattukkuttiyaay Piranthaaranro & 2 Vinthaiyaam Kiristhuvaik Kontaatuvom 2. Irulaana Nam Vaazhvil Oliyaertravae Vitivelli Natsatthiram Uthitthaaranro Marulaalae Kattuntor Vituvikkavae Arulaalae Uthiratthai Eenthaaranro Paralokil Nammai Saerkka Thamai Thaazhtthiyae Siluvaiyil Jeevanaith Thanthaaranro & 2 Iratsakar Yesuvaik Kontaatuvom Allaelooyaa Osannaa Allaelooyaavae & 3