பாடல் #3746
யேசு ராசா
🔤 Yaesu Raasaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு ராசா - எனை - ஆளும் நேசா! 1 மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே, - மனு வேலே, மாமறை நூலே தேவ செங் கோலே, இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு 2 தாவீ தரசன் மைந்தா, - நின் சரணம், சரணம் எந்தா! - சதா னந்தா வா னந்தா, உ வந்தாள்; மிக வந்தனம், வந்தனம்! - யேசு 3 ஐயா, என் மனம் ஆற்றி, - உன தடிமை என்றெனைத் தேற்றிக் - குண மாக்கி, வினை நீக்கிக், கை தூக்கி, மெய்ப் பாக்கியம் கொடு - யேசு 4 சுத்த திரித்துவ வஸ்துவே - சுவி சேட மகத்துவ கிறிஸ்துவே, - பரி சுத்தனே, கரி சித்தெனை இரட்சித் தடிமைகொள்; நித்தியம் தோத்திரம்! - யேசு 5 மங்களம் ஈசாவே - வளம் மிகும் சங்கையின் ராசாவே, - நரர் வாழ்வே, மன்னாவே, மெய்த் தேவே, உமக் கோசன்னாவே - யேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Raasaa - Enai - Aalum Naesaa! 1 Maasilaa Mani Aana Muchsudar Maesiyaa Arasae, - Manu Vaelae, Maamarai Noolae Thaeva Seng Kolae, Ingkenin Maelae Anpu Sey - Yaesu 2 Thaavee Tharasan Mainthaa, - Nin Saranam, Saranam Enthaa! - Sathaa Nanthaa Vaa Nanthaa, U Vanthaal; Miga Vandhanam, Vandhanam! - Yaesu 3 Aiyaa, En Manam Aarri, - Una Thatimai Enrenaith Thaerrik - Kuna Maakki, Vinai Neekkik, Kai Thookki, Meyp Paakkiyam Kotu - Yaesu 4 Suttha Thiritthuva Vasthuvae - Suvi Saeda Makatthuva Kiristhuvae, - Pari Sutthanae, Kari Sitthenai Iratsith Thatimaikol; Nitthiyam Thotthiram! - Yaesu 5 Manggalam Eesaavae - Valam Mikum Sangkaiyin Raasaavae, - Narar Vaazhvae, Mannaavae, Meyth Thaevae, Umak Kosannaavae - Yaesu