பாடல் #37443
வலைகள் கிழியத்தக்க
🔤 Valaigal Kizhiyatthakka
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dmin
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 98 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வலைகள் கிழியத்தக்க படகுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊர் எங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் ஆழகடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் இயேசு தான் இரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் நம் தேசம் அறியணுமே நாவுகள் சொல்லணுமே இயேசு தான் இரட்சகர் என்று - நம் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் நிழல்பட்டால் அதிசயம் ஆடை தொட்டால் உடல் சுகம் அன்றாடம் நடந்திடுமே சபையிலே ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்லை என்று நாம் முழங்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valaigal Kizhiyatthakka Patakugal Amizhatthakka Koottaalikku Kotukkatthakka Meenkal Kaanpom Orumanamaay Ursaagamaay Valaigal Veesuvom Oor Engkum Naatengkum Narseythi Solvom Aazhakatalilae Athigamaay Meen Pitippom Yesu Thaan Iratsakar Yesu Thaan Ulakin Meetpar Nam Thaesam Ariyanumae Naavugal Sollanumae Yesu Thaan Iratsakar Enru - Nam Sthaevaan Seythaar Arpudhanggal Vallamaiyaal Niraindhavaraay Nizhalpattaal Athisayam Aatai Thottaal Udal Sugam Anraadam Natanthitumae Sapaiyilae Aaviyinaal Nirainthituvom Paethuru Pol Arikkai Seyvom Manidhar Meetpataiya Vaeru Oru Naamam Illai Enru Naam Muzhangkituvom