பாடல் #37418
அழகிற் சிறந்த கோமானை
🔤 Azhakir Sirandha Komaanai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்; காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் – அழ 6. மதிவடிவான மன்னவரை இம்மண்டல மீதினிலே துதிசெய்ய பாவ திரளது நீங்கும் தேவா சீரோங்கும் – அழ 7. பதினாயிரம் பேராயினுமிவரே அழகிற் சிறந்தவராம் கதிதந்தெனையே கண்மணிபோல கருத்தாய்க் காப்பவராம் – அழ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Azhakir Sirandha Komaanai Naaneppo Kaanpaeno? Pazhavinai Theerttha Punniyanaik Kanteppo Makizhvaeno? 2. Poodhalatthil Naan Vaeroruvarai Ippatik Kantilaenae; Odhavumariyaen Unnatha Anpai Oyaatthuthi Seyvaen – Azha 3. Ippatikkottha Poorananai Ippoomiyil Kandathunto? Seppidap Paadham Pon Mayamaamae Jothi Vativaamae – Azha 4. Surarum, Nararum, Porrudharkuriya Sundharanaayakanaam; Varamalitthae Tham Paktharaik Kaakkum Valla Paran Sudhanaam – Azha 5. Aasaikkisaindha Naesarin Naamam Yesukiristhenbathaam; Kaasiniyengkum Kaettariyaadha Kartthan Thiruppaeraam – Azha 6. Mathivativaana Mannavarai Immandala Meethinilae Thuthiseyya Paava Thiralathu Neengkum Thaevaa Seerongkum – Azha 7. Pathinaayiram Paeraayinumivarae Azhakir Sirandhavaraam Kathidhanthenaiyae Kanmanipola Karutthaayk Kaappavaraam – Azha