பாடல் #37400
சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்
🔤 Saritthiratthai Irantaay Pilandhavaraam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே, தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் மாளிகையோ, புல்லணையில் தவழும் அதிபனுக்கு பாடுவேன் ஆரீரோ ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம் இறைவன் பிறந்தார் இன்று பாடுங்கள் பண் பாடுங்கள் நம் இறைவன் உதித்தார் இன்று மேய்ப்பர்கள் கலங்கிட வானிலே உதித்தாரே வேந்தன், தாவீதின் ஊரிலே புல்லணை தவழ்வாரே ராஜன், தூதன் வார்த்தை கேட்ட மந்தை மேய்ப்பர், அங்கு பணிந்து போற்றவே விரைந்தார், மந்தையோடு சென்ற மந்தை மேய்ப்பர் நம் பாலன் இயேசுவை பணிந்தார் , பொன்போளம் தூபம் கொண்டு ஞானி பணிந்தார் ஊரெங்கும் பாலகன் புகழ் பாடி மகிழ்ந்தார் உலகத்தின் இருளினை மாற்றிட ஒளியானார் தேவன் மனிதர்க்கு ஒளியினை காட்டிட மனுவானார் ராஜன் தன்னை தானே பலியாக தருவார் நமக்காக சிலுவையில் மரிப்பார் சாகாமை கொண்ட எங்கள் மீட்ப்பர், பாவ சாவை வெல்லவே ஜெனித்தார் மண்மீது மாட்சி தோன்ற மானிடனானார் மாசில்லா இறைவன் மண்ணில் மகிபனானார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saritthiratthai Irantaay Pilandhavaraam Kiristthaesu Piranthaarae, Theerkkanin Vaartthai Niraivaera Thaazhmaiyaay Uthitthaarae Thozhuvam Thaan Endhan Perumakanin Aezhmaiyin Maalikaiyo, Pullanaiyil Thavazhum Athibanukku Paatuvaen Aareero Aatunggal Kontaatunggal Nam Iraivan Piranthaar Inru Paatunggal Pan Paatunggal Nam Iraivan Uthitthaar Inru Maeypparkal Kalangkida Vaanilae Uthitthaarae Vaendhan, Thaaveethin Oorilae Pullanai Thavazhvaarae Raajan, Thoodhan Vaartthai Kaetta Manthai Maeyppar, Angku Paninthu Portravae Virainthaar, Manthaiyotu Sendra Manthai Maeyppar Nam Paalan Yesuvai Paninthaar , Ponpolam Thoobam Kontu Njaani Paninthaar Oorengkum Paalakan Pugazh Paati Makizhnthaar Ulakatthin Irulinai Maarrida Oliyaanaar Devan Manidharkku Oliyinai Kaattida Manuvaanaar Raajan Thannai Thaanae Paliyaaga Tharuvaar Namakkaaga Siluvaiyil Marippaar Saakaamai Konda Enggal Meetppar, Paava Saavai Vellavae Jenitthaar Manmeethu Maatsi Thondra Maanidanaanaar Maasillaa Iraivan Mannil Makibanaanaar