பாடல் #3740
இயேசு நாமமல்லாமல்
🔤 Yesu Naamamallaamal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமமல்லாமல் - உலகினில் வேறு நாமம் இல்லை - கிறிஸ்து. தேசுலாவிய கேருபீம்பணி திவ்ய வானவர் முனிவர் கண்மணி, மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி, மதிக்கும் சத்திய வேத சிரோமணி, - இயேசு 1.வானமும் புவியும் - கதி ரோன் மதி உடுவும் கானல் வரை கடலும் - நர ரான எவ்வுயிரும் தானே படைத்தருள் ஆதி காரணன், சர்வ ஜீவ தயாபரா பூரணன், ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன், இலங்கும் வேத சங்கீத பாராயணன். - இயேசு 2.காவிலாத மேவை - செய் தீவினையதனால் பூவின் மாந்தர் படும் - துயர் தேவ கோபமற, பாவிகளைப் பரனோடுற வாக்கப், பரம எருசலேம் நகர் சேர்க்க, மேவுமலகை அரணைத் தூளாக்க, மேதினியில் சமாதானம் உண்டாக்க, - இயேசு 3.பண்டு வேதியர்கள் - கைக் கொண்ட மாமறையில் விண்ட நாமமல்லாமல், - உயர் அண்ட மீதினிலும், மண்டலத்திலும், ஆழி கீழிலும், மாருதம் செலும் அட்ட திக்கிலும், தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும், துட்டர் வர விரும்பாத இடத்திலும், - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamamallaamal - Ulakinil Vaeru Naamam Illai - Kiristhu. Thaesulaaviya Kaerupeembani Thivya Vaanavar Munivar Kanmani, Maasillaadha Meynjnjaana Sikaamani, Mathikkum Satthiya Vaedha Siromani, - Yesu 1.vaanamum Puviyum - Kathi Ron Mathi Utuvum Kaanal Varai Katalum - Nara Raana Evvuyirum Thaanae Pataittharul Aathi Kaaranan, Sarva Jeeva Thayaabaraa Pooranan, Eenar Vaakkuk Kettaadha Meyyaaranan, Ilangkum Vaedha Sangkeedha Paaraayanan. - Yesu 2.kaavilaadha Maevai - Sey Theevinaiyathanaal Poovin Maandhar Patum - Thuyar Thaeva Kobamara, Paavigalaip Paranotura Vaakkap, Parama Erusalaem Nakar Saerkka, Maevumalakai Aranaith Thoolaakka, Maethiniyil Samaathaanam Untaakka, - Yesu 3.pantu Vaethiyarkal - Kaik Konda Maamaraiyil Vinda Naamamallaamal, - Uyar Anda Meethinilum, Mandalatthilum, Aazhi Keezhilum, Maarudham Selum Atta Thikkilum, Thondar Kookkural Ettum Thooratthilum, Thuttar Vara Virumpaadha Idatthilum, - Yesu