பாடல் #37375
தேவ நீதி நிறைவேறுதே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G
Beat: 2/4
தேவ நீதி நிறைவேறுதே தேவ கரம் உயர்ந்திடுதே 1. கர்த்தர் யேகோவா நித்திய கன்மலை கர்த்தர் நாமம் எங்கள் நம்பிக்கை மன உறுதியுடன் பற்றிக் கொண்டால் மெய் பூரண சமாதானம் காண்போம் 2. பெலனுள்ள நல் நகரம் உண்டே பரன் கிறிஸ்தேசு நம் அரணே அவர் தரும் இரட்சண்யம் அதின் மதிலே அங்கே அற்புத சத்தியம் ஓங்கும் 3. ஆதி சத்தியம் கைக் கொண்டு வரும் நீதியுள்ள ஓர் ஜாதி நுழையும் வாசல்களை உயர்த்தி திறந்திடுவோம் வெற்றி முழங்கும் கொடி பறக்கும் 4. உயர்ந்தவரைக் கீழே தள்ளினார் உயர்ந்த நகர் இடிந்ததுவே எளிமையானோர் கால் அதை மிதிக்க செம்மை அடையும் நல்லோர் வாழ்வே 5. நீதி நிறைந்த நல் தேசமதில் நீதி தயவை துன்மார்க்கன் கல்லான் தேவ மகத்துவத்தை கவனித்திடான் தேவன் நமக்காய் கிரியை செய்கிறார் 6. என் ஆத்துமாவே இராவினிலே என் கர்த்தரையே வாஞ்சித்திடவே அதிகாலமே என் ஆவியினால் அண்ணல் அறிவை நான் தேடிடுவேன்