பாடல் #37364
இன்பலோக யாத்திரையோர்
🔤 Inbaloga Yaatthiraiyor
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம் ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம், அன்பரும் சாகுவாரே; ஆனால் திரும்பக் கூடுவோம் ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர் அங்கே கிரீடம் பெறுவார்; இங்கே துன்பங்கள் சகிப்போர், இன்பக் கீதம் பாடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Inbaloga Yaatthiraiyor Naam Angkae Paava Millaiyaam; Angkae Veerar Aarpparippaar Angkae Kannee Rillaiyaam Jeeva Aarrin Karaiyil Santhippom Santhippom; Jeeva Aarrin Karai Yoram, Por Mutindhathin Pinpu 2. Nanpar Naam Ingkae Pirivom, Anbarum Saakuvaarae; Aanaal Thirumbak Kootuvom Jeeva Aarrin Karai Yoram 3. Ingkae Yutthatthil Nilaippor Angkae Kireedam Peruvaar; Ingkae Thunbanggal Sakippor, Inbak Keedham Paatuvaar