பாடல் #3736
யேசு நசரையி னதிபதியே
🔤 Yaesu Nasaraiyi Nathibathiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசு நசரையி னதிபதியே, - பவ நரர்பிணை யென வரும். தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ - யேசு 1. இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே; தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே; சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. - யேசு 2. நின் சுய பெனல்லால் என் பெலன் ஏது நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது; தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது; தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்; - யேசு 3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்; கேடுபாடுகள் யாவையும் தீரும்; பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்; பொன்னு லோகமதில் என்னையும் சேரும். - யேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesu Nasaraiyi Nathibathiyae, - Pava Nararpinai Yena Varum. Thaesuru Parathala Vaasap Pirakaasanae Jeevanae, Amarar Paavanae Makatthuva - Yaesu 1. Indha Ulaku Suvai Thanthu Poraatuthae, Enathudalum Athuvo Tisainthu Seeraatuthae; Thanthra Alakai Soozha Ninru Vaathaatuthae; Saami, Paaviyakam Noyinil Vaatuthae. - Yaesu 2. Nin Suya Penallaal En Pelan Aethu Ninaivu, Seyal, Vasanam, Muzhuthum Pollaathu; Thanjjam Unai Atainthaen, Thavara Vitaathu; Thaangki Aal Karunai Ongki Eppothum; - Yaesu 3. Kirupaiyudan En Irudhayandhanil Vaarum; Kaetupaatugal Yaavaiyum Theerum; Porumai, Nampikkai, Anpu Podhavae Thaarum; Ponnu Logamathil Ennaiyum Saerum. - Yaesu