பாடல் #37352
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
🎙 கிறிஸ்தவ பாடல்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள் எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2 மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள் ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர் மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2 யாக்கோபில் நியாயங்களும் நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ அவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2 என் பாவம் என்னை விட்டு தூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூ அல்லேலூயா-2