பாடல் #3730
யேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்
🔤 Yaesu Enggal Maeyppar Kanneer Thutaippaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார் மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார் துன்பம் நேரிட்டாலும் இன்பம் ஆயினும் யேசுவின் பின் செல்வோம் பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம் காதுக் கின்பமாகக் கேட்டுக் களிப்போம் கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார் நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர் ரத்தம் சிந்தினார் அதில் மூழ்குவோரே சுத்தர் ஆகுவார் பாவக் குணம் நீக்கி முற்றும் ரட்சிப்பார் திவ்ய தூய சாயல் ஆக மாற்றுவார். 4. யேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷி;ப்பார் ஓநாய்கள் வந்தாலும் தொடவே ஒட்டார் சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம் பாதாளத்தின் மேலும் ஜெயம் கொள்ளுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesu Enggal Maeyppar Kanneer Thutaippaar Maarpil Saertthanaitthu Payam Neekkuvaar Thunbam Naerittaalum Inbam Aayinum Yaesuvin Pin Selvom Paalar Yaavarum. 2. Nalla Maeyppar Sattham Nanraay Arivom Kaathuk Kinbamaagak Kaettuk Kalippom Kantitthaalum Naesar Aarrith Thaerruvaar Naanggal Pinnae Sella Vazhi Kaattuvaar. 3. Aattukkaaga Maeyppar Rattham Sinthinaar Athil Moozhkuvorae Sutthar Aakuvaar Paavak Kunam Neekki Murrum Ratsippaar Thivya Thooya Saayal Aaga Maarruvaar. 4. Yaesu Nalla Maeyppar Aattaip Poshi;ppaar Onaaykal Vanthaalum Thodavae Ottaar Saavin Pallatthaakkil Anjjavae Maattom Paathaalatthin Maelum Jeyam Kolluvom.