பாடல் #37285
நீர் என் கன்மலை
🔤 Neer En Kanmalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் என் கன்மலை நீர் என் இரட்சகர் நீர் என் நம்பிக்கை நீர் என் நங்கூரம் -2 நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம் நீரே என் மறைவிடம் நீரே என் கேடகம் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் முழு உள்ளதோடு ஆராதிப்பேன் துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் துதிக்கு பாத்திரர் நீர் மாத்ரமே -2 1. புயல் காற்று என்னை நோக்கி வீசிட்டாலும் சூழல் காற்று சுற்றி சுற்றி அடித்தாலும் பெருமழை என்மேல் பொழிந்தாலும் பெரும் வெள்ளம் என் மேல் மோதினாலும் கன்மலை மேல் நான் நின்றிடுவேன் அசைவுறாமல் நான் உறுதியாவேன் - 2 2. வனாந்திர வாழ்க்கை என் முன் நின்றாலும் வறட்சியின் கொடுமை சுற்றி சூழ்ந்தாலும் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை நோக்கி பாதை காட்டும் நேசரின் பின் செல்வேன் உம்மை நம்பி நான் வீழ்ந்ததில்லை வெட்கப்பட்டு நான் போவதில்லை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer En Kanmalai Neer En Iratsakar Neer En Nampikkai Neer En Nangkooram -2 Neerae En Kanmalai Neerae En Ataikkalam Neerae En Maraividam Neerae En Kaedakam Aaraathippaen Naan Aaraathippaen Muzhu Ullathotu Aaraathippaen Thuthitthituvaen Ummai Pugazhnthituvaen Thuthikku Paatthirar Neer Maathramae -2 1. Puyal Kaarru Ennai Nokki Veesittaalum Soozhal Kaarru Surri Surri Atitthaalum Perumazhai Enmael Pozhinthaalum Perum Vellam En Mael Mothinaalum Kanmalai Mael Naan Ninrituvaen Asaivuraamal Naan Uruthiyaavaen - 2 2. Vanaanthira Vaazhkkai En Mun Ninraalum Varatsiyin Kotumai Surri Soozhnthaalum Paalum Thaenum Otukindra Thaesatthai Nokki Paathai Kaattum Naesarin Pin Selvaen Ummai Nampi Naan Veezhndhathillai Vetkappattu Naan Povathillai -2