பாடல் #37283
தாய் உருகுவது போல்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
தாய் உருகுவது போல் என் நேசர் உருகுகின்றார் வா மகனே என்று அவர் வல்லமையால் அழைக்கிறார் தாய் உன்னை மறந்து போகலாம் தந்தை உன்னையும் வெறுக்கலாம் மாறாத நம் இயேசு ராஜன் மன்னித்துக் கிருபை அருள்வார் உற்றாரும் உறவினரும் உன்னை கைவிடலாம் உடன்பிறந்தவர் உன்னை மறந்து விடலாம் மாறாத நம் இயேசு ராஜன் நம் மனக்குறைகளை தீர்த்து வைப்பார் நண்பரும் உன்னை தள்ளி விடலாம் அருமை மனைவி உன்னை விட்டுவிடலாம் மாறாத நம் இயேசு ராஜன் நன்மைகள் செய்து நம் அருகில் இருப்பார்