பாடல் #37252
கலங்கும் உள்ளமே
🎙 கிறிஸ்தவ பாடல்
கலங்கும் உள்ளமே - நீ இயேசுவை நோக்கியே பார் கலக்கங்கள் யாவையும் நீக்கி இளைப்பாறுதல் தந்திடுவார் 1.வாழ்க்கையில் பலவித போராட்டங்கள் வரும் சோர்ந்து போகாதே மனதினில் பலவித குழப்பங்கள் நேரிடும் மனமும் தளர்ந்திடாதே வெற்றி நிச்சயம் - இது இயேசுவின் சத்தியம் 2.குடும்பத்தில் சில சில சிக்கல்கள் வந்தாலும் பயந்து போகாதே சூழ்நிலை யாவும் எதிராக வந்தாலும் கலங்கித் தவிக்காதே 3.சோதனை வேதனை சேர்ந்தே வந்தாலும் தளர்ந்து போகாதே போதனையால் உன்னை தேற்றிடும் இயேசுவை மறந்து போகாதே 4.கஷ்டமும் நஷ்டமும் மாறி மாறி வந்தாலும் கலங்கித் தவிக்காதே ஒளி வரும் நேரம் இருளாக தெரிந்தாலும் ஓடி ஒளிந்திடாதே